முடி வேரில் இருந்து கருப்பாக பாட்டி சொன்ன கைவைத்தியம் இதுதான்பா

Advertisement

நரை முடி கருப்பாக மாற

இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உணவு பழக்கங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தலை முடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் நரை முடி. நரை முடி அனைத்து வயதினருக்கும் ஏற்பட கூடிய ஒரு பிரச்சனையாக இப்போது உள்ளது. அதனால் இந்த நரை முடியை மறைக்க நாமும் பல வழிகள் யோசித்து இருப்போம். அதில் சில கடைகளில் விற்கப்படும் ஹேர் ஆயில், ஹேர் டை போன்றவற்றை வாங்கி பயன்படுத்தியும் இருப்போம். இவற்றை எல்லாம் வாங்கி பயன்படுத்துவதால். நமது முடியின் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். இதற்கு நிரந்தர தீர்வு என்ற ஒன்று எப்போதும் உண்டு. அதாவது வீட்டிலே இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருட்கள் கண்டிப்பாக நமக்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் வழங்கும். எந்த ஒரு பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது. அப்படிப்பட்ட ஒரு குறிப்பை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.

நரை முடி கருப்பாக மாற:

 

நரைமுடி

டிப்ஸிற்கு தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன் 
  2. கருவேப்பிலை- 2 கைப்பிடி அளவு 
  3. தேங்காய் எண்ணெய் – 200 ml  
  4. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. கடுகு எண்ணெய் (Mustard Oil) – 2 டேபிள் ஸ்பூன்

மூலிகை எண்ணெய் செய்முறை:

  1. ஒரு அடர்த்தியான கடாயில் எடுத்துவைத்துள்ள தேங்காய் எண்ணெயை சூடாக்கி கொள்ள வேண்டும். அதில் கடுகு எண்ணெயை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  2. பின்னர் அதில் நீங்கள் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டும்.
  3. எண்ணெயின் நிறம் மாறும் சமயத்தில் எடுத்துவைத்துள்ள கருச்சீரகத்தை சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  4. கடைசியாக எண்ணெயை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து, நன்றாக காற்று செல்லாதவாறு மமுடிவைக்க வேண்டும். இதனை வாரத்திற்கு இருமுறை தலையில் தேய்த்து குளித்துவந்தால் உங்கள் முடி கருமையாக மாறிவிடும்.
  5. நீங்கள் இதனை தலைக்கு தேய்த்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்னர் குளிக்கலாம். இதனை பயன்படுத்தும் போது தலைக்கு சீகைக்காய் உபயோகிப்பது நல்லது. அது உங்கள் முடியை அடியில் இருந்து கருமையாக்க உதவும்.

    முடி உதிர்வை தடுத்து வேகமான முடி வளர்ச்சிக்கு இயற்கையான கை வைத்தியம் என்ன ?

    இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement