முடி கருப்பாக நீளமாக வளர
மனிதர்கள் அனைவரும் பிறந்த நாள் முதல் வாழும் கடைசி நாள் வரை எண்ணற்ற பருவங்களை கடந்து வருகிறார்கள். இவ்வாறு கடந்து வரும் பருவங்களில் ஒவ்வொரு பருவத்தின் போது நிறைய மாற்றங்கள் நமது உடலிலும், தோற்றத்திலும் காணப்படும். அந்த வகையில் பார்த்தால் பலருக்கு இளம் வயதில் இருக்கும் போதே முடி வளருவதில் பிரச்சனை மற்றும் இளநரை என இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்தும் வயது ஆன பிறகு வந்தால் எதுவும் கிடையாது. ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு இப்போதே இந்த பிரச்சனை எல்லாம் வருகிறது. சரி இந்த பிரச்சனையினை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் கூட பயன் எதுவும் கிடைப்பது இல்லை. ஆகவே முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க இயற்கையான முறையினை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies to Grow Natural Black Hair:
நம்முடைய வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் ஆனது முடியின் வளர்ச்சியினை அதிகரிக்க செய்யவும், கருப்பாக வளர செய்யவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- வெங்காயம்- 1
முதலில் எடுத்துவைத்துள்ள வெங்காயத்தை சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலையினையும் சுத்தம் செய்து விடுங்கள்.
மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க
அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் கறிவேப்பிலை இலையினை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.
இதற்கு அடுத்த படியாக அதேபோல் மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து அதில் இருக்கும் சாற்றினை கறிவேப்பிலை பேஸ்ட்டில் பிழிந்து ஊற்றி விடுங்கள்.
இப்போது கிண்ணத்தில் உள்ள பொருளை நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டினை தலையில் உள்ள முடிகளின் வேர் கால்களில் படுமாறு மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து வழக்கமாக குளிப்பது போல தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் 2 முறை என ட்ரை செய்தால் போது சும்மா முடி கிடுகிடுவென கருப்பாகவும், நீளமாகவும் விரைவில் வளர ஆரம்பித்து விடும்.
சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…
மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்! அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |