முடி அடர்த்தியா கருப்பா வளர இது நான் சொல்லும் வைத்தியம் இல்லங்க பாட்டி சொன்ன வைத்தியம் ட்ரை பண்ணி பாருங்க..!

Advertisement

Home Remedies to Grow Thick Hair  

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இவருக்கும் பிறக்கும் போது முடி என்பது குறைவாக தான் இருக்கும். அதன் பிறகு நாம் வளர்ச்சி அடைய அடைய நமது முடியும் அதிகமாக வளர ஆரம்பித்து போதுமான அளவு இருக்கக்கூடும். ஆனால் என்ன தான் நமக்கு முடி இருந்தாலும் கூட நம்மை விட முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும் ஒரு நபரை பார்த்தால் எப்புடுற இப்படி எல்லாம் என்று வாய் பிளக்க வைக்கும் சம்பவங்களும் நடந்து இருக்கும். இத்தகைய நிகழ்வு நடந்து பிறகு நாமும் என்னவாது செய்து முடியை அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர வைக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அந்த வகையில் உங்களின் கனவு அனைத்தும் பழிக்கும் விதமாக முடியினை அடர்த்தியாக கருப்பாக வளர வைக்க பாட்டி சொன்ன டிப்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி கருப்பாக அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்:

முட்டையில் நாம் பல விதமான ரெசிபிகள் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் முட்டை அதற்கு மட்டும் பயன்படாமல் நமது தலை முடி வளர்ச்சியினை அதிகரிக்க செய்வதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் நாம் முட்டையுடன் சில பொருட்களை சேர்த்து ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

  • முட்டை- 2
  • தயிர்- 2 ஸ்பூன்

முடி கருப்பாக அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

முதலில் எடுத்துவைத்துள்ள 2 முட்டையில் இருக்கும் வெள்ளைக் கருவினை மட்டும் ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி விடுங்கள். அடுத்து 2 ஸ்பூன் தயிரை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக 10 நிமிடம் வரை கலந்துக் கொள்ளுங்கள்.

இப்போது கலந்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் அனைத்து பகுதிகளிலும் படுமாறு அப்ளை செய்து சுமார் 20 முதல் 25 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிரகள தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி தலைக்குளித்து விடுங்கள்.

இத்தகைய முறையினை மாதம் 2 முறை செய்து வருவதன் மூலம் முட்டை மற்றும் தயிரில் உள்ள சத்துக்கள் நமது முடியை நன்றாக அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரும்.

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்  அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement