Home Remedies White Hair to Black Hair Naturally
நம் தாத்தா பாட்டி கெல்லாம் வயதானால் கூட நரை முடி பிரச்சனை ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு கெமிக்கல் நிறைந்த பேக்குகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் வெள்ளை முடி கருப்பாக தோன்றும், ஆனால் நாளடைவில் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் தான் இந்த பதிவில் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து எப்படி நரை முடியை கருப்பாக மாற்றுவது என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பேக் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம்- 1
எலுமிச்சைப்பழம்-1
கருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி
பேக் செய்முறை:
வெங்காயம் முடி வளருவதற்கு மட்டுமில்லாமல், வெள்ளை முடிக்கும் உதவுகிறது. கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு உதவுகிறது.
முதலில் 1 வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். இதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும், பின்பு இதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். கருஞ்சீரகத்தை எடுத்து பவுடராக அரைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பவுல் எடுத்து அதில் வெங்காய சாறு 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, கருஞ்சீரக பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
வித்தியாசமான முறையில் பழங்களின் தோலை பயன்படுத்தி செய்த ஹேர் டை.. 100% ரிசல்ட் தரக்கூடியது
அப்ளை செய்யும் முறை:
நாம் தயார் செய்து வைத்துள்ள பேக்கை தலை முடி முழுவதும் தடவி 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு இதனை 1/2 மணி நேரத்திற்கு அப்படியே விட வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கலாம்.
இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் வெள்ளை முடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |