Home Remedy for Curly Hair Straightening in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது அழகினை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் அதற்கான நேரத்தை தான் நம்மால் செலவிட முடியவில்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் அனைவருக்குமே அதிக வேலைகள் உள்ளது. பொதுவாக நமக்கு அழகினை சேர்ப்பது நமது தலைமுடி தான். ஆனால் ஒரு சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். அதனால் தங்களது தலைமுடியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்களும் தங்களது தலைமுடியை நேராக மற்ற பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். அவையாவும் அவ்வளவு நல்ல பலனை அளித்திருக்காது. அதனால் இன்று இயற்கையான முறையில் உங்களின் சுருட்டை தலைமுடியை நேராக மற்ற உதவும் ஒரு குறிப்பினை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Straighten Hair Naturally at Home Permanently in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் சுருட்டை தலைமுடியை நேராக மற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
இந்த குறிப்பிற்கு தேவைப்படும் பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் பால் – 100 மி.லி
- எலுமிச்சை பழம் – 1
- பாதாம் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- ஸ்ப்ரே பாட்டில் – 1
இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்
குறிப்பு செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 100 மி.லி தேங்காய் பால் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
முதலில் இதனை நீங்கள் பயன்படுத்துவதற்கு முதல் நாள் நீங்கள் தலைக்கு குளித்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுத்த நாள் இதனை தயாரித்து உங்கள் தலைமுடியில் ஸ்ப்ரே செய்து ஒரு சிப்பினை பயன்படுத்தி நேராக சீவி 1 மணிநேரம் அப்படியே விடுங்கள் அதன் பிறகு தலைக்கு குளியுங்கள்.
இதனை ஒரு வாரத்திற்கு இருமுறை என ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்தாலே உங்கள் சுருட்டை தலைமுடி நிரந்தரமாக நேராக மாறிவிடும்.
இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்க முதுமையில் கூட நரைமுடி வராது
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |