Home Remedy for Glowing Skin in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் நமது முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. அதனால் அதனை சரி செய்வதற்காக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை அடைகிறது.
அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Skin Whitening Home Remedies in Tamil:
இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- காய்ச்சாத பால் – 6 டேபிள் ஸ்பூன்
- ஆவாரம் பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- ஓட்ஸ் மாவு – 1/2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்
30 நிமிடத்தில் உங்க முகம் பொலிவு பெற பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 6 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடி மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தூளை கலந்து கொள்ளவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
உதிர்ந்த இடத்திலேயும் புதிய முடியை வளர வைக்க பச்சைபயிர் மட்டும் போதும்
கற்றாழை ஜெல்லினை சேர்த்து கொள்ளவும்:
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளுங்கள்.
தேனை கலக்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் தேனையும் கலந்து உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள்.
இதனை தினமும் செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் காட்சியளிக்கும்.
உங்க உதடுகள் கோவைப்பழம் போல் சிவப்பாக மாற பாதாம் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |