நாமக்க இவ்வளோ முடி இருக்குதுனு நீங்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு முடி வளர டீத்தூள் போதும்..!

Advertisement

Home Remedy for Hair Growth Fast in Tamil

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் தங்கள் முடியை பராமரித்து அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அவசர சூழலில் அது நடக்காத காரியமாகிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் நமது தலைமுடியை சரியாக பராமரிக்க முடியாமல் போகின்றது. எனவே நாம் சரியாக நமது தலைமுடியை பராமரிக்காததால் பல வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைகிறது. எனவே தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை வளர வைப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mudi Adarthiyaga Valara Tips in Tamil:

long hair

நாம் அனைவருக்குமே நமது தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் அதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் அளிக்காத பலனை அளிக்க கூடிய டிப்ஸ் ஒன்றை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர் 
  2. டீத்தூள் – 100 கிராம் 
  3. கருவேப்பிலை – 1 கப் 
  4. மருதாணி – 1 கப் 
  5. தண்ணீர் – 1 கப் 

டக்குனு உங்க நரைமுடி எல்லாம் கருப்பாக மாற வெந்தயம் மட்டும் போதும்

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் தண்ணீரை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் டீத்தூளை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் கருவேப்பிலை மற்றும் 1 கப் மருதாணி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை நாம் கொதிக்க வைத்துள்ள டீத்தூளுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். இது நன்கு பசைபோல் மாறிய உடன் இதனை நன்கு வடிக்கட்டி இதில் உள்ள சாற்றினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் வடிக்கட்டி வைத்துள்ள சாற்றினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க

பயன்படுத்தும் முறை:

பின்னர் இதில் உள்ள எண்ணெய்யை மட்டும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை நீங்கள் தலைக்கு குளிக்க செல்வதற்கு முன்னால் 1/2 மணிநேரம் தலையில் தடவி அதன் பிறகு தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்றுமுறை என தொடர்ந்து செய்து வந்தால் நீங்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு முடி வளரும்.

போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும் எப்படி பயன்படுத்தனும் தெரியுமா

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

 

Advertisement