மத்தவங்க எவ்ளோ கலரா இருக்கீங்கனு சொல்லுவாங்க..! அதுக்கு இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Home Remedy For Skin Whitening in 3 Days 

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்கள் இதில் அந்தளவிற்கு ஆர்வம் காட்ட மாட்டர்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. அழகுக்கென்றே அதிக நேரத்தை செலவிடுவார்கள். அப்படி அவர்கள் செலவிடும் முக்கியமான விஷயம் என்றால் அது கலராக மாறுவது தான். நம்மில் பலருக்கும் முகம் எப்பொழுதும் கலராக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். இதனால் இன்று இல்லையென்றாலும் நாளடைவில் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் தான் இன்று உங்களுக்கு உதவும் வகையில் இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்கும் பேஸ் பேக் செய்வது பற்றி கூறப்போகிறேன். அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

முகம் பொலிவு பெற இயற்கை டிப்ஸ்: 

தக்காளி செடி

முகத்தை பொலிவு பெற செய்வதற்கு நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் தக்காளி. பொதுவாக நம்மில் பலரும் வீட்டில் இருக்கும் போது தக்காளியை முகத்தில் அப்ளை செய்வோம். காரணம் தக்காளியில் இருக்கும் பண்புகள் சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கி முகத்தை பொலிவாக வைத்து கொள்கிறது. மேலும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் தடுக்கிறது.

ஆனால் நம்மால் தினமும் தக்காளியை முகத்திற்கு பயன்படுத்த முடியாது அல்லவா..! அதனால் தக்காளியை அரைத்து Ice Cubes Box அதாவது உங்கள் வீட்டு பிரிட்ஜில் ஐஸ் கட்டி பாக்ஸ் இருக்கும் அல்லவா அதில் ஊற்றி வைத்து விடுங்கள். பின் தக்காளி சாறு ஐஸ் கட்டியாக மாறிவிடும். அதை தினமும் காலை மாலை என்ற 2 வேளையும் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க

முகம் பொலிவு பெற: 

முல்தானி மெட்டி எடுத்து கொள்ளவும்

  1. முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்
  2. தயிர் – 1 ஸ்பூன்
  3. புதினா சாறு சிறிதளவு
  4. ரோஸ் வாட்டர் தேவையான அளவு

முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி, தயிர், புதினா இலைகளை கசக்கி அதில் இருக்கும் சாறு, பின் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் பேஸ் பேக் ரெடி. இந்த பேஸ் பேக்கை வாரத்தில் 2 முறை உங்கள் முகத்தில் அப்ளை செய்து வந்தால், முகம் பொலிவு பெறும். மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள், பள்ளங்கள் போன்றவை மறையும்.

உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement