Home Treatment for Pimples and Dark Spots Face
இன்றைய மாசுக்கள் நிறைந்த வாழ்க்கை சூழலில், நமது சருமம் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அதாவது வெயில், புகை மாசு இவற்றால் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது முக பரு. முக பரு நமது சருமத்தில் ஒரு வடுவாக உருவாகிறது. முக பருவால் ஏற்படும் கரும்புள்ளி என்றும் நீங்க வடுவாக நமது முகத்தில் நிலைத்து விடுகிறது. அந்த வகையில் இன்று அழகுக் குறிப்பு பதிவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆண் பெண் இருவருக்குமே அழகான முகம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் வராமல் தடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்து வருகின்றோம். அந்த முயற்சிகள் யாவும் உங்களுக்கு பலனளிக்காமல் போகிறதா..? அப்போ இந்த பதிவை முழுமையாக படித்து அதன் படி செயல்படுங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகத்திற்கு கற்றாழை:
கற்றாழை பயன்படுத்துவதால் இறந்த செல்களை அளித்துவிட்டு புதிய செல்கள் வளர்ச்சியை தூண்டும்.
கற்றாழை அழகு குறிப்புகள்:
- முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை பிரித்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
- பின் அதனுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக ஜெல்லை கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அந்த ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி மஜாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- இப்படி செய்து வருவதால் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையம் போன்றவை நீங்கி விடும். அதுபோல முகத்தில் வறட்சி நீங்கி பருக்கள் வராமல் தடுக்கும்.
கற்றாழை பயன்படுத்துவதால் உங்களின் சருமம் ஆரோக்கியமாக காணப்படும்.
முக பொலிவுக்கு நீங்கள் தினமும் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 அவுன்ஸ் தண்ணீர் குடிப்பதால் உங்களின் சாரும் மிருதுவாகவும் பளபளனும் மாறும்.
உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |