Homemade Face Mask for Glowing Skin in Winter
இந்த குளிர்காலம் வந்தாலே உதடு காய்ந்து போகும், முகத்தில் வெள்ளையாக தோன்றும். நன்றாக தூக்கம் வரும், இதனால் முகம் பொலிவிழந்து காணப்படும். இந்த மழைக்காலத்தில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்வது என்று யோசிப்பார்கள். சில பேர் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பார்கள். சில பேர் இயற்கையான முறையில் செய்யும் நேரமில்லாமல் செயற்கையை தேர்ந்தெடுப்பார்கள்.இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் தான் ஈஸியான பேக் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளபளப்பாக வைத்து கொளவ்து எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஸ் வாட்டர் மற்றும் தேன்:
ஒரு பவுல் எடுத்து கொண்டு அதில் ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும், பின் இதனுடன் தேன் 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது போல வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
என்றும் பள பளப்பான சருமத்திற்கு சந்தனத்தை இப்படி பயன்படுத்துங்கள் போதும்.
ஆயில் ஸ்கின் உடையவர்களுக்கு பேஸ் பேக்:
ஒரு பவுலில் கடலை மாவு 1/2 கப் எடுத்து கொள்ள வேண்டும், இதனுடன் பால் 1 தேக்கரண்டி, மஞ்ச தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
வறண்ட சருமத்திற்கான பேஸ் பேக்:
ஒரு பவுலில் பால் 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, காபி தூள் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் அப்ளை செய்ய வேண்டும்.
மேல் கூறப்பட்டுளள்து போல் உங்கள் முகத்திற்கு ஏற்றவாறு பேக்கை தேர்வு செய்து அப்ளை செய்து வாருங்கள் முகம் வெள்ளி கிண்ணம் போல் ஜொலிக்கும்.
நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |