Home Remedies Face Pack For Glowing Skin
சிலருக்கு வீட்டில் இருப்பதை விட வெயிலில் சென்று வந்ததும் முகம் கருமையாகி விடும். அதாவது, வெயிலினால் உண்டாகும் வெப்பம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் முகத்தில் அழுகுக்குகள் தேங்கி கருப்பாக மாறி விடுகிறது. இதனால் பலபேர் பலவிதமான பேஸ் வாஷ்கள், பேஸ் க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருவார்கள். ஆனால், செயற்கை பொருட்களை அளவுக்கு அதிகமாக சருமத்தில் அப்ளை செய்வதன் மூலம் நாளடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எந்த எதை செய்ய நினைத்தாலும் அதனை இயற்கையான முறையில் செய்வது வருவதன் மூலம் மட்டுமே பக்கவிளைவில்லாத பலன்களை பெற முடியும்.
எனவே, அந்த வகையில் இப்பதிவில், சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி முகத்தை எப்போதும் பளப்பளப்பாக வைக்கக்கூடிய சூப்பரான இயற்கையான வீட்டு குறிப்பு ஒன்றினை பற்றி பின்வருமாறு பார்க்கலாம். இதனை நீங்கள், உங்கள் முகம் கருமை அடைந்துவிட்டது என்று உணரும்போதெல்லாம் பயன்படுத்தி வரலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Glowing Skin in Tamil:
அரிசி மாவு பேஸ் பேக்:
முதலில், ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் தயிர் 3 ஸ்பூன், அரிசி மாவு 2 ஸ்பூன் மற்றும் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது, முகத்தை நன்றாக கழுவி துடைத்துவிட்டு தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலரவிடுங்கள். அதற்கு பிறகு, தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவி துடைத்து விடுங்கள்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க பாட்டி சொன்னதுங்க
பால் பேஸ் பேக்:
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க பாலை பயன்படுத்த வேண்டும். பாலை முகத்தில் அப்ளை செய்து நன்கு 3 நிமிடங்கள் வரை நன்கு தேய்த்து விட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும்.
அடுத்து, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு, 1/2 சந்தனத் தூள் மற்றும் 1/4 மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து, 10 அல்லது 15 நிமிடம் வரை அப்படியே வைத்து அதன் பிறகு, முகத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள்.
இம்முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தாலே போதும் உங்கள் முகத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |