மினு மினுப்பான முகம் வேண்டுமா
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். அழகுக்காக அதிக நேரத்தை செலவு செய்வார்கள். அப்படி இருக்கும் போதும் முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் என்று முக அழகே போய்விடுகிறது. மேலும் இந்த பிரச்சனையை நாம் சரி செய்வதற்காக மீண்டும் கடைகளில் கிடைக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். அதனால் இனி கடைகளில் கிடைக்கும் பொருட்களை விட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள். வெறும் 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி முகத்தை மினு மினுப்பாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Homemade Face Whitening Tips -1:
- கடலை மாவு – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- தயிர் – தேவையான அளவு
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கடலைமாவை எடுத்து கொள்ளவும். பின் அதில் மஞ்சள் தூள், தயிர் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்து பின் கழுவி கொள்ளுங்கள்.
இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தினமும் செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.
15 நாட்களில் உங்களின் நிறத்தை அதிகரிக்க இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும்
Homemade Face Whitening Tips -2:
- பீட்ரூட் சாறு – 2 ஸ்பூன்
- கடலைமாவு – 1 ஸ்பூன்
- தயிர் – 1 ஸ்பூன்
ஒரு பாதி அளவில் உள்ள பீட்ரூட்டை எடுத்து கொள்ளவும். பின் அதை சீவி அதில் இருக்கும் சாறை மட்டும் எடுத்து கொள்ளவும். பின் அதில் கடைமாவு 1 ஸ்பூன் மற்றும் தயிர் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளவும். பின் நன்றாக மசாஜ் செய்து முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் வெண்மையாக மாறுவதை நீங்களே காணலாம்.
குங்குமப்பூ மட்டும் போதும் 5 நிமிடத்தில் சருமத்தை 2 மடங்கு பொலிவு பெற செய்யலாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |