முடி மூன்று மடங்கு நீளமாக வளர
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய உலகம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு தான் இருக்கிறது. அவ்வளவு ஏன் நம் அனைவருக்குமே இந்த விஷயம் நன்றாக தெரியும். இருந்தும் நாம் அந்த பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. அப்படி நாம் பயன்படுத்தும் பொருட்கள் அதிகமாகவே இருக்கிறது. அதில் ஓன்று தான் தேங்காய் எண்ணெய். பெரும்பாலும் நாம் அனைவருமே தேங்காய் எண்ணெயை கடையில் வாங்கி தான் பயன்படுத்துகிறோம்.
அதில் கெமிக்கல் இல்லை என்று சொல்லவே முடியாது. இப்படி நாம் கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதால் முடி உதிர்வு, முடி வளர்ச்சியின்மை, நரைமுடி போன்ற பல பிரச்சனைகள் வருகிறது. இதனை தடுக்க என்ன தான் வழி என்று யோசிப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் 3 நாட்களில் முடியை 3 மடங்கு நீளமாக வளர செய்யும் எண்ணெய் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Homemade Fast Hair Growth Oil in Tamil:
- தேங்காய் எண்ணெய் – 200 ML
- சின்ன வெங்காயம் – 6
- வெந்தயம் – 3 ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
எண்ணெய் செய்யும் முறை:
முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும். பின் அதில் சின்ன வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும்.
முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெயை தலையில தடவி பாருங்க 100% ரிசல்ட்
பிறகு அதில் வெந்தயம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு சேர்த்து கொள்ளவும். எண்ணெய் நன்றாக கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயில் நாம் சேர்த்திருக்கும் அனைத்து பொருட்களும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும்.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல தினமும் தடவி வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரித்து முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். மேலும் முடி உதிர்வு, நரைமுடி பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |