முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெயை தலையில தடவி பாருங்க 100% ரிசல்ட்

Advertisement

homemade hair growth oil recipe in tamil

பெண்களுக்கு முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். ஆனால் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதனை சரியாக பராமரிப்பது அவசியமானது. வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் சரியாக சாப்பிடுவதில்லை, முடியை பராமரிப்பதும் இல்லை. அதுமட்டுமில்லாமல் முடியின் வளர்ச்சிக்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முடி உதிர்வு மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

8 மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

தேவையான பொருட்கள்:

8 மூலிகைகள் கலந்த இந்த எண்ணைய்

  1. செம்பருத்தி பூக்கள் – 20
  2. வேப்ப இலை – 30
  3. கறிவேப்பிலை – 30
  4. வெங்காயம் – 5 (சிறியது)
  5. வெந்தய விதைகள் – 1 டீஸ்பூன்
  6. கற்றாழை – 1 இலை
  7. மல்லிகை பூ – 15-20
  8. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

செய்முறை:

முதலில் வெந்தய விதையை 30 நிமிட ஊற வைக்க வேண்டும்.

30 நிமிடம் ஊறிய பிறகு மிஸ்ட் ஜாரில் சேர்க்க வேண்டும், அதோடு மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தயும் சேர்த்து அரைக்க வேண்டும்.

பிறகு கடையில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விட வேண்டும். அடுப்பை குறைந்த தீயிலே வைத்து 45 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்த பிறகு எண்ணெயை ஆற விடவும். ஆறிய எண்ணெயை வடிகட்டியை பயன்படுத்தி சக்கி இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

பயன்படுத்துவது எப்படி.?

நாம் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தலை முடி முழுவதும் நன்றாக தடவி 1  அப்படியே விடவும். 1 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். இது போல் நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

எண்ணெயின் நன்மைகள்:

  • செம்பருத்தி, கறிவேப்பிலை, வெங்காயம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • வேப்ப இலைகள் பொடுகு மற்றும் பேன் வராமல் தடுக்கிறது.
  • கற்றாழை பளபளப்பைத் தருவதோடு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • வெந்தயம் முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement