ஹேர் பேக் தயாரிப்பது எப்படி.?
நம்முடைய பாட்டிகளுக்கெல்லாம் முடி நிறையாகவும், கருப்பாகவும் இருந்தது. அது எப்படி சாத்தியம் என்று பலரும் சிந்திப்பீர்கள். ஆவை வேறொன்னுமில்லை நம்முடைய பாட்டிகள் இயற்கையான ம்,முறையில் தயாரித்த எண்ணெயை தவிர வேறு ஏதும் பயன்படுத்தவில்லை. சொல்லல்போனால் தேங்காய் எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்தினார்கள், அதுவும் செக்கில் ஆட்டிய எண்ணெயை தான் பயன்படுத்தினார்கள்.
இரண்டாவது அவர்கள் வீட்டில் தான்இருந்தார்கள், வேலைக்கு எல்லாம் செல்லவில்லை, இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படவில்லை. இதனால் அவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படவில்லை. மூன்றாவது தலைமுடியை முறையாக பராமரித்தார்கள். அதனால் அவர்களுக்கு முடியில் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. அதனால் இயற்கையான முறையில் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அவோகேடா பழம் ஹேர் பேக்:
அவோகேடா பழத்தில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இவை முடியை ஈரப்பதமாக்கி முடியை அடர்த்தியாக வளர்வதற்கு உதவி செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. இவை முடி உதிராமலும், சாப்ட் ஆகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அதில் அவோகேடா பழம் மற்றும் வாழைப்பழத்தின் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அவ்ளோ தாங்க பேக் ரெடி. இதனை பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம்
பயன்படுத்துவது எப்படி.?
நாம் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலை முடியில் தடவி 30 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து கொள்ளல் வேண்டும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
ஆளி விதை ஹேர் மாஸ்க்:
ஆளிவிதைகளில் ஒமேகா-மூன்று கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன, இது அடர்த்தியான முடியை ஊக்குவிக்க உதவுகிறது. இவை தலைமுடியில் பொடுகு பிரச்சனை இல்லாமலும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
1/2 கப் ஆளிவிதையை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
மறுநாள் காலையில் ஆளி விதையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவை சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.
பின் இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்துவது எப்படி.?
நாம் தயார் செய்து வைத்துள்ள பேக்கை இரவு தூங்க போவதற்கு முன்பு தடவி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும், மறுநாள் காலையில் எழுத்து தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வெறும் 30 நாட்கள் மட்டுமே போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |