உதிர்ந்த இடத்திலேயும் புதிய முடியை வளர வைக்க பச்சைபயிர் மட்டும் போதும்..!

Homemade Hair Mask for Hair Growth in Tamil

Homemade Hair Mask for Hair Growth in Tamil

இன்றைய சூழலில் உள்ள வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றின் காரணமாக நமது உடலுக்கு பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் பல வகையான பிரச்சனைகளில் இந்த தலைமுடி உதிர்வும் ஒன்று. ஆம் நண்பர்களே இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனை உள்ளது.

அதனால் இந்த தலை முடி உதிர்வை நீக்கி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடியை வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை பயன்படுத்தி உங்களின் தலை முடியை நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்த்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Pack for Hair Growth in Tamil:

Hair Pack for Hair Growth in Tamil

இயற்கையான முறையில் உங்களின் தலைமுடி உதிர்வை நிறுத்தி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடியை வளர வைக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

  1. பச்சைப்பயிறு – 1 கப் 
  2. வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் – 10
  5. செம்பருத்தி இலை – 10 
  6. சாதம் வடித்த தண்ணீர் – 2 கப் 

ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வை நிறுத்தி முடி நீளமாக வளர வேண்டுமா அப்போ சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பச்சைப்பயிறு, 4 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயத்தை இரண்டும் மூன்றுமாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

30 நிமிடத்தில் உங்க முகம் பொலிவு பெற பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்

சாதம் வடித்த தண்ணீரை சேர்த்து கொள்ளவும்:

இப்பொழுது இதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் சாதம் வடித்த தண்ணீரை சேர்த்து 8 முதல் 10 மணி நேரம் ஊறவிடுங்கள்.

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

இவையெல்லாம் நன்கு ஊறிய பிறகு அவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 10 செம்பருத்தி இலையையும் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை உங்கள் தலை முடியின் வேர்களில் படுமாறு தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர ஆரம்பிக்கும்.

உங்க உதடுகள் கோவைப்பழம் போல் சிவப்பாக மாற பாதாம் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்