இந்த எண்ணெயை தடவி நரைமுடிக்கு புள் ஸ்டாப் வையுங்க

Advertisement

நரைமுடிக்கு எண்ணெய்

நம் பாட்டிக்கெல்லாம் முடியானது நரைக்காமலும், உதிராமலும் இருந்தது, அதற்கு முக்கிய காரணம் அவர்கள் முடிகளை சரியாக பராமரித்ததே ஆகும். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் முடிகளை சரியாக பராமரிப்பதில்லை. சரியாக எண்ணெய் தடவுவது இல்லை, வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து தலை தேய்த்து குளிப்பதில்லை.

அதுமட்டுமில்லாமல் கெமிக்கல் நிறைந்த எந்த பொருட்களையும் பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைத்த பொருட்களை பயன்படுத்தினார்கள். இன்றைய காலத்தில் உள்ளவர்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். இதனால் விரைவில் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இன்னொன்று மன அழுத்தம் காரணமாக நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் இயற்கையான முறையில் நரைமுடி பிரச்சனையை சரி செய்ய எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்- 300 ml

ஆமணக்கு எண்ணெய்- 50 ml

கலோஞ்சி எண்ணெய்- 50 ml

பெரிய வெங்காயம்- 2

நெல்லிக்காய்- 2

செம்பருத்தி இலை- 1 கைப்பிடி

கருவேப்பிலை- 1 கப்

வெந்தயம்- 2 தேக்கரண்டி

கற்றாழை ஜெல்- 2 தேக்கரண்டி

கிராம்பு-5

வைட்டமின் ஈ எண்ணைய்- 10 சொட்டு

முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..

எண்ணெய் செய்முறை:

நரைமுடிக்கு எண்ணெய்

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளவும், அதில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களில் வைட்டமின் ஈ எண்ணெயை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

கருவேப்பிலையின் நிறம் மாறும் வரை கொதிக்க விட வேண்டும், நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும். அதன் பிறகு இதனை வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்துவது எப்படி.?

நாம் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தலையில் 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனை 5 அல்லது 6 மணி நேரத்திற்கு அப்படியே விட வேண்டும். அதன் பிறகு மைல்டு ஷாம்பூவை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

இந்த குறிப்பை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் நரைமுடி கருப்பாக மாறிவிடும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement