Long Hair Growth Homemade Oil
பொதுவாக பெண்களுக்கு முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதனால் கடைகளில் விற்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது வேண்டுமானால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் நாளடைவில் முடி உதிர ஆரம்பிக்கும். அதனால் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி வளர இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய்- 1/4 லிட்டர்
- வெந்தயம்- 2 தேக்கரண்டி
- கருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை- சிறிதளவு
- வெங்காயம்- 2
- ஆமணக்கு எண்ணெய்- 150 மில்லி லிட்டர்
எண்ணெய் செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய், 150 மில்லி லிட்டர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கொள்ளவும். பின் இதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரக பொடியை சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதனுடனே நறுக்கி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். வெங்காயத்தை சேர்த்துவுடன் நுரை நுரையாக வரும். இந்த நுரையெல்லாம் அடங்குவதற்கு 15 நிமிடம் ஆகும். அதனால் நுரை எல்லாம் அடங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
தலைமுடி கட்டுக்கடங்காமல் வளர முட்டையுடன் இதை கலந்து தடவுங்க போதும்
எண்ணெயின் சூடு ஆறிய பிறகு ஒரு காட்டன் துணி எடுத்து அதில் எண்ணெயை சேர்த்து சக்கை இல்லாமல் வெறும் எண்ணெயை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.
இந்த எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தடவி கொள்ளவும். இதில் சேர்த்திருக்க கூடிய பொருட்கள் அனைத்தும் முடி உதிர்தலை தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கூடியது. மேலும் கருஞ்சீரகத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் நரை முடி வருவதையும் தடுக்கிறது. சின்ன வெங்காயமானது தலையில் பொடுகு இருந்தால் அவற்றை நீக்க கூடியது. கருவேப்பிலையை வைட்டமின் பி இருப்பதால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
நரை முடி கருப்பாக மாற இந்த எண்ணெய் மட்டும் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |