வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஊரே உங்க முடியை திரும்பி பார்க்கணுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!

Updated On: November 3, 2023 9:59 AM
Follow Us:
homemade herbal hair oil in tamil
---Advertisement---
Advertisement

Homemade Herbal Hair Oil in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! நீங்களோ நானோ யாராக இருந்தாலும் முடி கொட்டாமல் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். இதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும். மீண்டும் அதை சரி செய்ய வேறு எண்ணெயை பயன்படுத்துவார்கள். இப்படி செய்வதால் முடிக்கு பாதிப்பு அதிகமாகி கொஞ்சம் இருக்கின்ற முடியும் கொட்டிவிடும். அதனால் கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கட்டுக்கடங்காமல் காடு போல் முடி வளர இயற்கை எண்ணெய்: 

இயற்கை முடி வளர்ச்சி எண்ணெய்

  1. வெந்தயம் – 3 ஸ்பூன்
  2. வேப்பிலை சிறிதளவு
  3. வெற்றிலை – 4 
  4. நெல்லிக்காய் – 6 
  5. மருதாணி இலை சிறிதளவு
  6. துளசி சிறிதளவு
  7. செம்பருத்தி இலை சிறிதளவு
  8. செம்பருத்தி பூ – 6
  9. சின்ன வெங்காயம் – 10 
  10. கற்றாழை – 1 
  11. கிராம்பு – 6 

இடுப்புக்கு கீழே முடி வளரணுமா.. அப்போ இந்த எண்ணெயை தடவி பாருங்க..

இயற்கை முடி வளர்ச்சி எண்ணெய்: 

இயற்கை முடி வளர்ச்சி எண்ணெய்

முதலில் வெந்தயத்தை ஊறவைத்து கொள்ளுங்கள். பின் ஒரு மிக்சி ஜாரில் கற்றாழையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து அதில் செம்பருத்தி இலை, வேப்பிலை, மருதாணி இலை, துளசி, நெல்லிக்காய், செம்பருத்தி பூ, சின்ன வெங்காயம், வெற்றிலை மற்றும் கிராம்பு இவை அனைத்தும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து கொள்ளவும்.

பின் அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் நன்றாக கொதித்து நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின் எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி வரை தடவி வந்தால் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now