homemade long hair growth oil in tamil
தலைமுடி வளர்ச்சிக்காக நீங்களும் என்ன என்னமோ ட்ரை செய்து அதிலிருந்து ரிசல்ட் இல்லையென்று கவலைப்படுகிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து தன மூலம் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். நீங்கள் கெமிக்கல் நிறைந்த எண்ணெய் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடிக்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ-30
எள் எண்ணெய்- ஒரு கப்
ஆலிவ் ஆயில்- 1/4 கப்
பாதாம் ஆயில்- 2 தேக்கரண்டி
ஆமணக்கு எண்ணெய்-1 கப்
வெந்தயம் – 4 தேக்கரண்டி
எண்ணெய் செய்முறை:
முதலில் செம்பருத்தி பூக்களை எடுத்து நன்றாக காய வைத்து கொள்ளவும். பூவானது நன்றாக சுருங்கி, காய்ந்து நிறம் மாறியதும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.
இந்த பூவுடன் வெந்தயம், பாதாம் ஆயில், ஆமணக்கு எண்ணெய், செம்பருத்தி, ஆலிவ் ஆயில், எள் எண்ணெய் சேர்த்து இரண்டு நாட்களுக்கு சூரிய ஒளியில் படுமாறு வைத்து கொள்ளவும்.
இரண்டு நாட்கள் கழித்து வெயிலில் உள்ள எண்ணெயை எடுத்து விட வேண்டும். இதிலிருந்து தலைக்கு தேவையான அளவு எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். அதன் மேல் பகுதியில் தலைக்கு தேவையான அளவு எண்ணெய் எடுத்து வைத்தோம் அல்லவா அதனை மேலே வைத்து சூடு செய்யவும். அதவது டபுள் பாய்லர் Method முறையில் சூடு செய்ய வேண்டும்.
10 நாட்களில் முடி வளர வேண்டுமா.! அப்போ இந்த எண்ணெயை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க
எண்ணெய் சூடான பிறகு எண்ணெயை தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். இதனை 30 நிமிடம் வைத்திருக்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இது போல் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |