How Many Times a Day Should You Wash Your Face
அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும், குறிப்பாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்பது பலபேரின் ஆசை. ஆகையால், முகத்தை அழகுபடுத்துவதற்காக பலவிதமான க்ரீம்களையும் பயன்படுத்தி வருவார்கள். அதுமட்டுமில்லாமல், பெரும்பாலானவர்கள் முகத்தை ஒரு நாளைக்கு அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பார்கள். ஏன் உங்களுக்கு தெரிந்தவர்கள் கூட அப்படி செய்து பார்த்து இருக்கலாம். அதுவும் முகத்தை வெறும் தண்ணீரால் மட்டும் கழுவ மாட்டார்கள். பேஸ் வாஷ், சோப்பு போன்றவற்றை போட்டு தான் கழுவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான செயல் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.
முகத்தை ஒரு நாளைக்கு பல முறை கழுவுவதால் சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் இயற்கையான ஹைட்ரேட்டிங் எண்ணெய்களையும் அழுக்குடன் சேர்த்து நீங்கி விடுகிறது. இதனால், வறண்ட சருமம், தோலில் சுருக்கங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகிறது. ஆகையால் நாம் அனைவருமே, ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவ வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவ வேண்டும்.?
பொதுவாக ஒரு நாளைக்கு முகத்தை இரண்டு முறை மட்டுமே கழுவ வேண்டும். அதாவது, காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் கழுவ வேண்டும். இரவில் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க காலையில் முகம் கழுவுதல் அவசியம். அடுத்து, காலையில் இருந்து மாலை வரை முகத்தில் படிந்திருக்கும் வெயில் கருமை , எண்ணெய் வடிதல், சுற்றுசூழல் அழுக்கு போன்றவற்றை போக்க மாலையில் ஒருமுறை முகத்தை கழுவ வேண்டும். அதற்கு மேல் முகத்தை கழுவினால் சருமம் எளிதில் வறண்டு போவதோடு சுருக்கங்கள் போன்ற பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்
வறட்சியான சருமம் உள்ளவர்கள்:
வறட்சியான சருமம் (Dry Skin) உடையவர்கள் ஒருநாளைக்கு ஒரு முறை தான் முகத்தை கழுவ வேண்டும். முகத்தில் அழுக்கு, தூசுகள் படிந்தால் மட்டுமே இரண்டு முறை கழுவ வேண்டும். Dry Skin உள்ளவர்கள் அதிகமாக முகத்தை கழுவினால், இருப்பதை விட சருமம் இன்னும் அதிகமாக வறண்டு போய்விடும்.
எண்ணெய் பசை சரும உள்ளவர்கள்:
எண்ணெய் பசை சரும உள்ளவர்கள் (Oily Skin) ஒருநாளைக்கு இரண்டு முறை கழுவ வேண்டும். முகத்தில் அழுக்கு, தூசுகள் படிந்தால் மட்டுமே அதிகபட்சம் மூன்று முறை கழுவ வேண்டும்.
பருக்கள் உள்ளவர்கள்:
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பின், ஒரு நாளைக்கு 4 முறை முகத்தை கழுவலாம். ஆனால், சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரை மட்டும் கொண்டு முகத்தை அதிகபட்சம் நான்கு முறை கழுவ வேண்டும்.
பனிக்காலத்தில் முகத்தை பளபளப்பாக தேனுடன் இதையும் சேர்த்து அப்ளை செய்யவும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |