அடர்த்தியான மற்றும் நீளமான முடிக்கு
ஆரோக்கியமான, கருமையான பளபளப்பான கூந்தலை நாம் அனைவரும் விரும்புவோம். ஆனால் அந்த கருமையான அடர்த்தியான கூந்தல் நம்மில் பலருக்கு கனவாகத்தான் உள்ளது. சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அடர்த்தியான முடி உதிர்ந்து வாழ் போன்ற தோற்றத்தில் காணப்படும். அதனால் பலருக்கு மனஉளைச்சல்கள் ஏற்படும்.நமது கூந்தலை முறையான பராமரிப்பின் மூலம் இழந்த பழைய கூந்தலை நம்மால் கொண்டுவர முடியும். இன்று உள்ள சுற்றுசூழல் மாசுபடும் நமது கூந்தல் உதிர்வில் முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் ஒரு சில இயற்கை பொருட்களால் நமது முடி உதிர்வை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் கடைபிடித்த வழக்கங்களை நாமும் பின்பற்றினால் நமது முடி உதிர்வை படிப்படியாக குறைத்து கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெறலாம். வாருங்கள் அந்த இயற்கை பொருட்கள் என்ன?, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உங்களின் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காய் எண்ணெய்:
முடி வேகமாக வளர:
வைட்டமின் சி அதிகம் கொண்ட நெல்லிக்காய் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே, இது வலுவான மற்றும் நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய் எண்ணையில், முழு நெல்லிக்காயை சேர்த்து கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்வு குறைந்து, முடி வளர துவங்கும்.
நெல்லிக்காய் மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் -2
கற்றாழை – 1
மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு
கருவேப்பிலை -1 கைப்பிடி அளவு
வெந்தயம் -2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் -300 ml
வெற்றிலை -2
நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில் நெல்லிக்காய், வெந்தயம்,கருவேப்பிலை, மருதாணி மற்றும் கற்றாழை என அனைத்தும் அரைத்துக்கொள்ளவும்.
பிறகு மிதமான வெப்பத்தில் ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் 300 ml தேங்காய் எண்ணெயை சூடாக்க வேண்டும்.
சிறிது சூடாக்கிய பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
கலவை கருநிறமாக மாறிய பின்னர் வெற்றிலையை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு அந்த எண்ணெயை குளிர்வித்து வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய பின்னர் அதனை நீங்கள் வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயில் உள்ள நெல்லிக்காய் வெந்தயம் என்ன அனைத்து பொருட்களும் குளிர்ச்சி நிறைந்தது எனவே உங்களின் முடி வளர்ச்சியை தூண்டும்.
அப்ளை செய்யும் முறை:
ஸ்டேப் 1:
நெல்லிக்காய் எண்ணெய் நன்றாக உலர்ந்ததும் அதனை எடுத்து உங்கள் தலையில் மசாஜ் செய்வது மட்டும் அல்லாமல் முடியின் அனைத்து பகுதிகளிலும் தேய்க்க வேண்டும்.
ஸ்டேப் 2:
இதனை குளிப்பதற்கு 30 நிமிடம் அல்லது 1 மணிநேரத்திற்கு முன்னதாக தலையில் தேய்த்து அதன் பிறகு நீங்கள் வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பினை கொண்டு முடியை அலசி விடுங்கள்.
முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும் சூட்டினை குறைத்து முடி உதிர்தலை தடுக்கிறது.
சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…
செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |