24 மணி நேரமும் முகத்தை பளபளப்பாக வைத்திருப்பது எப்படி.?

Advertisement

முகம் பொலிவு பெற 

நம் முன்னோர்களின் காலத்தில் மேக்கப், பார்லர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது. அவர்கள் இயற்கையாக கிடைக்க கூடியவற்றை வைத்து முகத்தை அழகுபடுத்தி கொண்டனர். ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் இருக்கும் போது கூட யாரும் மேக்கப் இல்லாமல் இருப்பதில்லை. நீங்கள் எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே அவை முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும். சிறிது நேரம் கழித்து முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் தான் இந்த பதிவில் முகம் பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய்:

முகம் பொலிவு பெற 

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெய் முகத்தை பொலிவடைய செய்யும், காபி தூள் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

முக பளபளப்பு பேக்:

முகம் பொலிவு பெற 

பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் உள்ளது, இது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது. பப்பாளியை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். இதை பேஸ்ட்டாக எடுத்து கொள்ளவும். இந்த் பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இந்த பேக்கை 7 நாட்கள் தொடர்ந்து அப்ளை செய்வதன் மூலம் முகம் பளபளப்பாகும்.

 முக பளபளப்பு பேக்:

முகம் பொலிவு பெற 

தக்காளியில் இருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தக்காளியில் வறண்ட சருமத்தையும் பளபளப்பாக்கும்.

முக பளபளப்பு பேக்:

முகம் பொலிவு பெற 

முல்தானி மெட்டி சிறிதளவு, அதனுடன் ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து காய்ந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும்.

 முக பளபளப்பு பேக்:

முகம் பொலிவு பெற 

ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் ஓட்ஸ் சேர்த்து கொள்ளவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement