Natural Ingredients For Glowing Skin in Tamil
அனைவருக்குமே சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் அழுக்கு சேர்ந்து இருக்கும். இதனை நம் கவனிக்காமல் இருக்கும் போது முகத்தில் அதிக அழுக்கு சேர்ந்து முகத்தில் பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். தினமும் முகத்திற்கு சோப்பு மட்டும் போட்டால் முகத்தில் உள்ள அனைத்து அழுக்கும் நீங்கிவிடும் என்று கூறமுடியாது. ஏனென்றால் தோலின் அடிப்பகுதியில் அழுக்கு படிந்திருக்கும். எனவே முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே இயற்கையான முறையில் முகத்தில் உள்ள அழுக்கினை நீக்கி முகம் பொலிவாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Get Glowing Skin Naturally at Home in a Week in Tamil:
பால் பயன்படுத்தவும்:
பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குகிறது. எனவே, பாலை முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை வெள்ளையாக்கலாம்.
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு முகத்தை தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி துடைத்து விட்டு, இந்த பேஸ்டை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
அப்ளை செய்து 15 நிமிடம் வரை வைத்து அதன் பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இதேபோல், நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
உங்க முகம் எப்படிங்க இவ்வளவு வெள்ளையாச்சு கேட்பாங்க.. பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தினால்..!
பப்பாளி பயன்படுத்தவும்:
பப்பாளியில் உள்ள என்சைம்கள் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. எனவே முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்ள பப்பாளியை இப்படி பயன்படுத்துங்கள்.
முதலில் 1/4 கப் அளவு அளவிற்கு பழுத்த பப்பாளியின் பேஸ்ட்டை எடுத்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் வரை வையுங்கள். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இதேபோல் நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
மேலே கூறப்பட்டுள்ள இரண்டும் முகத்திற்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாத இயற்கை பொருட்கள் ஆகும். எனவே உங்களுக்கு விருப்பமானவற்றை நீங்கள் பயன்படுத்தி பயனடையலாம்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |