Best Remedy For Hair Growth and Thickness in Tamil
அக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தலைமுடி இருப்பிற்கு கிழே நீளமாக வளர்ந்து இருக்கும். ஏனென்றால் அக்காலத்தில் எல்லாம் இயற்கையான உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள். முக்யமாக வயல் வெளிகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டும் தலைக்கு குளித்து வந்தார்கள். இதனால் தான் அக்காலத்தில் உள்ள பெண்களுக்கு முடி அதிகமாக இருக்கும். இவ்வளவு ஏங்க.. நம் அம்மா, அத்தை, சித்தி, பாட்டி ஆகியோருக்கு முடி அதிகமாக இருந்தியிருக்கும். ஆனால், இப்போது எல்லாமே தலைக்கீழாக இருக்கிறது. நம் முன்னோர்களுக்கு எந்த அளவிற்கு முடி அதிகமாக இருந்ததோ அந்த அளவிற்கு நமக்கு முடி உதிர்ந்தும் வளர்ச்சி அடையாமலும் இருக்கிறது.
எனவே, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளில் ஒன்றை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Long Hair Naturally in Tamil:
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் – 4
- பச்சை பயிறு – 100 கிராம்
- செம்பருத்தி இலை – 15
முதலில், பச்சை பயிரை 8 மணிநேரம் வரை ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். அடுத்து, செம்பருத்தி இலையை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில், சின்ன வெங்காயம், ஊறவைத்த பச்சை பயிறு மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இதனை ஒரு துணியில் சேர்த்து நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, முடியில் சிக்கு இல்லாமல் சீவி எண்ணெய் வைத்து ஊறவைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை எடுத்து தலையின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
நீளமான முடி வேண்டுமா..? அப்போ இதை மட்டும் முடியில் அப்ளை செய்யுங்கள்..!
தலை முழுவதும் அப்ளை செய்த பிறகு, 20 நிமிடம் அல்லது 30 நிமிடம் வரை ஊறவைத்து அதன் பிறகு தலையை நன்கு அலசி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதும் ஒரே மாதத்தில் உங்கல் முடி இருப்பிற்கு கீழ் வளரும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |