How To Get Rid of Dark Hands and Feet
பொதுவாக நாம் அனைவருமே முகத்தை அழகாகவும் வெள்ளையாகவும் வைத்திருக்க தான் விரும்புவோம். இதற்காக பலவிதமான பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்துவோம். ஆனால், முகத்தை பராமரிக்கும் அளவிற்கு கைகளையும் கால்களையும் பராமரிப்பது இல்லை. இதனால் தான் பெருமபாலானோர்க்கு முகம் மட்டும் வெள்ளையாக இருக்கும். அவர்களின் கையும் காலும் கருப்பாக இருக்கும். எனவே முகத்தை எந்த அளவிற்கு பராமரிக்கின்றோமோ அந்த அளவிற்கு நமது கை கால்களையும் பராமரிக்க வேண்டும். எனவே, அந்த வகையில் கை மற்றும் கால்களில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாக மாற வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies For Black Hands and Feet in Tamil:
உருளைக்கிழங்கு சாறு:

கை, கால் மற்றும் முக்கியாக முட்டிகளில் உள்ள கருமை நிறம் நீங்க உருளைக்கிழங்கு சாற்றினை பயன்படுத்த வேண்டும். அதாவது, கருமையாக உள்ள கை மற்றும் கால்களில் உருளைக்கிழங்கு சாற்றினை தடவி 20 நிமிடங்கள் வரை வைத்து அதன் பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீங்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறம் நீங்கி வெண்மையாக மாறிவிடும்.
பால் மற்றும் அரிசி மாவு:
காய்ச்சாத பாலில் அரிசி மாவு கலந்து கை மற்றும் கால்களில் நன்கு தேய்த்து 5 மசாஜ் செய்து 10 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இதனை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்தாலே போதும்.. உங்கள் கை மற்றும் காலின் நிறம் அதிகரித்திருப்பதை நீங்களே உணரலாம்.
15 நிமிடத்தில் கருத்துப்போன முகம் வெள்ளையாக மாற இந்த பேஸ் பேக்கை மட்டும் போடுங்கள்..!
எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரை:

முதலில் ஒரு பாதி அளவு எலுமிச்சை பழத்தினை எடுத்து கொள்ளுங்கள். அதில், சர்க்கரையை தொட்டு கை மற்றும் காலின் கருமை நிறம் உள்ள இடங்களில் நன்கு அப்ளை செய்து தேய்த்து விடுங்கள். அதன் பிறகு, 15 நிமிடம் களித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விடுங்கள்.
இதனை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்தாலே போதும்.. உங்கள் கை மற்றும் காலின் நிறம் அதிகரித்திருப்பதை நீங்களே உணரலாம்.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














