5 நாட்களில் கழுத்தில் உள்ள கருமை மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

How to Get Rid of Dark Neck Quickly in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை ஆகியவற்றால் நமக்கு பலவகையான சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி யை ஏற்படும் பல சரும பிரச்சனைகளில் ஒன்று தான் கழுத்தில் உள்ள கருமை. அதனால் அதனை போக்குவதற்கு நாமும் பல வகையான வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட கலந்த கிரீம், ஸ்கிராபர் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவோம். ஆனாலும் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்காது. அதனால் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் உங்கள் கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Get Rid of Dark Neck Fast at Home in Tamil:

How to Get Rid of Dark Neck Fast at Home in Tamil

இயற்க்கையான முறையில் உங்கள் கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தோசைமாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் 
  4. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  5. ஆவாரம்பூ பொடி –  1 டேபிள் ஸ்பூன் 

10 நாட்களுக்கு இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு தலைமுடி வேகமாக வளரும்

செய்முறை:

முதலி ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நன்கு புளித்த தோசைமாவு, 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல் நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

அவற்றை நன்கு கலந்த பிறகு உங்களின் கழுத்தில் கருமையாக உள்ள இடத்தில் தடவி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு துணியை பயன்படுத்தி நன்கு துடைத்து கொள்ளுங்கள் அதன் பிறகு குளிந்த நீரை பயன்படுத்தி நன்கு கழுவி கொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள பள்ளங்களை 7 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் போக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement