Get Rid of Pimples in 2 Days in Tamil
முகத்தில் பருக்கள் வந்தால் முகத்தின் அழகையே கெடுத்து விடும். அதுமட்டுமில்லாமல் சிலருக்கு அதிக வலியை ஏற்படுத்தும். இதனால் முகத்தில் முறையாக சோப்பு கூட போட முடியாமல் அவதி படுவார்கள். இதனால் எப்படியாவது முகத்தில் உள்ள பருக்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று பல வழிகளை பின்பற்றி இருப்பார்கள். அந்த வகையில் இப்பதிவில் முகத்தில் உள்ள பருக்களை நீக்கக்கூடிய இயற்கை முறைகளை தொகுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Rid of Pimples Overnight Naturally in Tamil:
தேன்:
தேன் உணவு பொருளாக மட்டுமில்லாமல் முகத்தில் உள்ள பருக்களை நீக்கவும் பயன்படுகிறது.
எனவே 2 ஸ்பூன் தேனை எடுத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 1 மணிநேரம் வரை அப்படியே வையுங்கள். அதன் பிறகு, குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
எலுமிச்சை பழம்:
எலுமிச்சை பழம் சரும பிரச்சனையை தீர்க்க பயன்படுகிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதனை உட்கொள்வதாலும் உடலில் பல நன்மைகள் உண்டாகிறது. எனவே இரவு தூங்கும்போது ஒரு காட்டன் பஞ்சில் எலுமிச்சை சாற்றை நனைத்து முகத்தில் தடவி வருவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறைந்து விடும். அதுமட்மில்லாமல் முகத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது.
துளசி:
1 கப் வெந்நீரில் துளசி இலையை போட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள். பிறகு இந்த தண்ணீரை இரவு தூங்கும்போது முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து மறுநாள் காலையில் முகத்தை நன்றாக கழுவி விடவும்.
உங்க முகம் எப்படிங்க இவ்வளவு வெள்ளையாச்சு கேட்பாங்க.. பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தினால்..!
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் சருமத்திற்கு மிகவும் நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் பருக்க உள்ள இடத்தில் அப்ளை செய்து அரை மணிநேரம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இந்த முறையை நீங்கள் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மேற்கூறியுள்ள இந்த குறிப்புகளில் உங்களுக்கு பிடித்த ஒன்றை பயன்படுத்தி பயனடையுங்கள். என்னதான் முகத்தில் பருக்களை நீக்க பல க்ரீம்கள் இருந்தாலும் அது இயற்கை பொருட்களின் பயன்பாட்டிற்கு ஈடாகாது. எனவே என்றைக்குமே இயற்கை பொருட்களை பயன்படுத்தி நற்பலன்களை பெறுங்கள்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |