How to Get Rid of Pits on Face Naturally in Tamil
நாம் அனைவருக்குமே அவரவரின் அழகினை சரியாக பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் நாம் நமது அழகினை பராமரித்து கொள்வதற்கென்று தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கக்கவே முடியவே இல்லை. இதற்கு காரணம் இன்றைய அவசர சூழல் தான். ஆம் நண்பர்களே இன்றைய சூழலில் அனைவருக்குமே அதிக அளவு வேலைகள் உள்ளது. அந்த வேலைகளை செய்வதற்க்கே நமது நேரம் சரியாக உள்ளது. அதனால் நமது அழகினை பராமரிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கவே முடியவில்லை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு எளிமையான முறையில் நமது அழகினை பராமரிக்க உதவும் குறிப்புகளை பார்த்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றும் முகத்தில் உள்ள பள்ளங்களை 7 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் போக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Remove Pits on Face Naturally in Tamil:

இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் உள்ள பள்ளங்களை போக்க உதவும் எளிமையான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க. அதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- எலுமிச்சை பழம் – 1
- ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
- கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க
எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தின் தோல்களை பிரித்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை சேர்த்து கொள்ளவும்:
அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடத்தில் எந்த ஒரு வலியும் இல்லாமல் அக்குள் பகுதியில் உள்ள முடிகளை நீக்க இந்த ஒரு பொருள் போதும்
கிளிசரினை கலந்து கொள்ளுங்கள்:
பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரினை கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெலினை சேர்க்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னால் இதில் இருந்து சிறிதளவு எடுத்து தடவி நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். பிறகு இரவு முழுவதும் விட்டுவிட்டு மறுநாள் காலையில் நன்கு வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய ஆரம்பிப்பதை காணலாம்.
தலைமுடி அடர்த்தியாக வளரவேண்டுமா அப்போ இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














