இயற்கையான முறையில் நரை முடியை போக்க வீட்டு வைத்தியம்….

Advertisement

  நரைமுடியை போக்க வீட்டு வைத்தியம் 

இளம்வயதிலே நரை என்பது நவீன வாழ்க்கை முறையில் சகஜமாக மாறிவிட்டது. இப்படி 20 வயதிலேயே தோன்றிய வெள்ளை முடிகளை கண்டு பலருக்கும் பயம், அந்த வெள்ளைமுடிகளை மறைக்க பலரும் பல முயற்சிகள் எடுப்பார்கள். தலைமுடியில் கருப்பு டை அடிப்பது தொடங்கி சந்தையில் கிடைக்கும் அனைத்துவிதமான ஷாம்புக்களையும்  பயன்படுத்திருப்போம். ஆனால் எந்த முயற்சியும் நமக்கு கைகொடுத்திருக்காது. இந்த டை மற்றும் ஷாம்புகள் எல்லாம் சிறிது நாட்கள் மட்டும் தான். வெள்ளை முடிகளுக்கு காரணம் நமது உடல் போதுமான அளவு மெலமைன் என்ற ஹோர்மோன் உற்பத்தி செய்யமால் இருப்பது தான். உங்கள் உடலில் மெலமைன் ஹோர்மோன் உற்பத்தியை அதிகரித்து உங்களது நரை முடி நீங்க உங்களுக்காக சில எளிமையான வீட்டு மருத்துவம்….

உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு முதல் படி, சரியாக விகிதத்தில் உங்களது சாப்பாட்டு முறை இருக்க வேண்டும். தினமும் கீரைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் தயிர் போன்றவை அதிகம் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதால் அது உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், பளபளப்பான நீண்ட கூந்தலுக்கும் வழிவகுக்கும்.

நரை முடிக்கு வீட்டு வைத்தியம்:

நரை முடியை கருப்பாக மாற்ற சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே உங்களுக்காக…

1. நெல்லிக்காய் மற்றும் வெந்தயம்:

நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் நரை முடிக்கு சிறந்த இயற்கை வைத்தியமாக உள்ளது. நெல்லிக்காய்களில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால்  ஆயுர்வேதத்தில் அனைத்து வகையான முடி பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் மற்றும் அதன் கீரைகள் இளம்வயதிலே  நரைப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

நீங்கள் உங்கள் முடிக்கு பயன்படுத்தும் எண்ணெயில் 6-7 துண்டுகள் நெல்லிக்காய் மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கொதித்த பிறகு அதனை வடிகட்டி, குளிர செய்து இரவில் உங்கள் தலைமுடியில் தேய்த்து விட்டு மறுநாள் காலையில் தலைகுளித்தல் உங்கள் முடி மிக விரைவாக கருமை நிறத்தை அடையும்.

நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த டை மட்டும் போதும்..

2. பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

how to get rid of white hair naturally at young age

வாரத்தில் இரு முறை 2:3 என்ற விகிதத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையிலும் முடியிலும் நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலை குளிக்க வேண்டும். இதை போன்று 3 வாரங்கள் தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் வெள்ளை மூடிகள் நீங்கி கருமையான மூடி வளரும்.

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது வேர்கள் வரை ஊட்டமளிக்கிறது மற்றும் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கிறது. எலுமிச்சை சாறு முடிக்கு பொலிவு சேர்ப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இது நரை முடியை இயற்கையாகவே போக்க உதவும்.

நரை முடி கருப்பாக வேண்டுமா..? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க போதும்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement