போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..

Advertisement

Hair Growth Tips For Hibiscus in Tamil 

பெரும்பாலான பெண்கள் தனது முடி வளர்ச்சியில்லாமல் இருப்பதை கண்டு மிகவும் வருத்தமடைவார்கள். எப்படியாவது முடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகளை கடைபிடித்து இருப்பார்கள். பொதுவாக முடி வளராமல் அதிகமாக உதிர்வதற்கு காரணம் என்னெவென்றால் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதே ஆகும். இச்சத்து இயற்கையாகவே நாம் உண்ணும் உணவுகளில் இருந்து முடிக்கு சென்றடையும். ஆனால், பெரும்பாலானோருக்கு இச்சத்து கிடைப்பதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் நேரடியாக தலைமுடிக்கு சில சத்துக்களை அளிக்க வேண்டும். தலைமுடிக்கு தேவையான சத்துக்களை அளித்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதில் இயற்கை பொருட்களுக்கு அதிக பங்கு உண்டு. எனவே முடிக்கு அதிக சத்தினை அளிக்கக்கூடிய செம்பருத்தியை பயன்படுத்தி எப்படி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How To Grow Hair Faster at Home in Tamil:

how to grow hair faster naturally in tamil

செம்பருத்தி எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி இலை – 10
  • செம்பருத்தி பூ – 5
  • தேங்காய் எண்ணெய் – 100 மில்லி

செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் முறை:

முதலில் செம்பருத்தி இலையில் எடுத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் செம்பருத்தி பூக்களையம் எடுத்து கொள்ளுங்கள். இப்போது இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 மில்லி அளவிற்கு தேங்காய் எண்ணெய்யை சேர்த்து சூடாக்கி கொள்ளுங்கள். பிறகு இதனுடன் அரைத்து வைத்த செம்பருத்தி பேஸ்டினைலந்து கொள்ளுங்கள்.

இப்போது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் செம்பருத்தி எண்ணெய் தயார்..

செலவு செய்திடாமல் முடியை கருப்பாக நீளமாக மாற்ற பாட்டி சொன்ன மாறி இந்த இரண்டையும் கலந்து தடவுங்க 

அப்ளை செய்யும் முறை:

ஸ்டேப் 1:

செம்பருத்தி எண்ணெய் நன்றாக உலர்ந்ததும் அதனை எடுத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி பகுதி வரை தேய்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் 2:

உடையின் வேர்களிலில் தேய்த்து 2 அல்லது 4 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

செம்பருத்தி பூ முடி வளர

ஸ்டேப் 3:

இதனை குளிப்பதற்கு 30 நிமிடம் அல்லது 1 மணிநேரத்திற்கு முன்னதாக தலையில் தேய்த்து அதன் பிறகு நீங்கள் வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பினை கொண்டு முடியை அலசி விடுங்கள்.

இம்முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்த வேண்டும்.

நன்மைகள்:

இவ்வாறு செம்பருத்தியை பயன்படுத்துவதன் மூலம் செம்பருத்தியில் உள்ள அமினோ அமிலங்கள் முடிக்கு ஊட்டச்சத்தினை அளித்து முடி வளர்ச்சியினை தூண்டுகிறது.

முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும் சூட்டினை குறைத்து முடி உதிர்தலை தடுக்கிறது.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement