Fast Hair Growth Home Remedies in Tamil
இப்போது தலைமுடி பிரச்சனை சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அதாவது, அனைவருக்குமே தலைமுடி பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு முடி வளராமல் இருக்கும்.. இன்னும் ஒரு சிலருக்கு, இளம் வயதிலே நரைமுடி இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு பொடுகு, பேண் மற்றும் முடி உதிர்தல் இருக்கும்.. இதுபோன்று பல தலைமுடி பிரச்சனைகள் இருக்கிறது. எனவே, இவை அனைத்தையும் சரிசெய்யக்கூடிய ஹேர் பேக் ஒன்றினை விவரித்துள்ளோம்.
1 மாதத்தில் உங்கள் முடியை சரியான முறையில் பராமரித்து வந்தீர்கள் என்றால் உங்கள் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதாவது, முடி வளர நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஹேர் பேக் அப்ளை செய்வது தான். எனவே, அந்த வகையில் இப்பதிவில் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Grow Hair Faster in a Week Naturally in Tamil:
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 4
- முருங்கை இலை பவுடர் – 3 ஸ்பூன்
- முட்டை வெள்ளை கரு – 1
மேலே கூறியுள்ள பொருட்களை உங்களின் முடியின் அளவிற்கு ஏற்றவாறு எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை:
முதலில், வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதாவது, வெங்காயத்தின் சாறு தண்ணீரில் நன்றாக இறங்கும்வரை கொதிக்க வைத்து ஆறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின், ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். இதில், முருங்கை இலை பவுடர், பச்சை முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெங்காய சாறு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஹேர் பேக் தயார்..!
பயன்படுத்தும் முறை:
தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவி எண்ணெய் வைத்து ஊறவைத்து கொள்ளுங்கள். அடுத்து, தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை எடுத்து முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்து அதன் பிறகு, முடியை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள்.
இதுபோன்று நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும்.. முடி கொடிய இடத்தில் முடி வளர தொடங்கும். அதுமட்டுமில்லாமல், முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |