Karuveppilai Mudi Valara | கருவேப்பிலை முடி வளர
பெண்களான அனைவருக்கும் தனது தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடி கம்மியாக இருக்கும் பெண்கள் முடி அதிகமாக இருக்கும் பெண்களை பார்த்தால் இந்த மாதிரி எனக்கு எப்போ முடி வளரும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் இப்பதிவில் சொல்லப்பட்டுள்ள குறிப்பினை பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் மற்றவர்களை பார்த்து கூறியது போல் உங்களை பார்த்து நிறைய பேர் எப்படி இவ்வளவு முடி வளத்தீங்கன்னு கேட்பாங்க.. ஓகே வாருங்கள் தலைமுடியை இடுப்பிற்கு கீழ் நீளமாக வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
தலைமுடியை நீளமாக வளரவைக்க கருவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்.?
கருவேப்பிலை எண்ணெய்:
- முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்து கொள்ளுங்கள். இதனை கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் உலர வைத்து கொள்ளுங்கள்.
- இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு, கருவேப்பிலையை இதனுடன் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
- நன்கு கொதித்ததும், இதனை சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.
- இந்த எண்ணெய்யை தலைகுளிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாக தலைமுடியின் வேர்கால்களில் இருந்து முடியின் நுனி பகுதி வரை அப்ளை செய்து மசாஜ் செய்து பிறகு குளித்து விடுங்கள்
- இந்த எண்ணெய்யை நீங்கள் வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் உங்கள் முடி நீளமாகவும் இயற்கையாகவும் வளர்வதை நீங்களே பார்க்கலாம்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.
கருவேப்பிலை பேஸ்ட்:
- முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 நெல்லிக்காய் மற்றும் 1 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
- இப்போது இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளுங்கள்.
- இந்த பேஸ்டினை உங்கள் தலைமுடியில் அப்ளை செய்து 1/2 மணிநேரம் வரை ஊறவிடுங்கள். அதற்கு பிறகு தலையை அலசி விடுங்கள்.
- இதை நீங்கள் வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் உங்கள் முடி நீளமாகவும் இயற்கையாகவும் வளர்வதை நீங்களே பார்க்கலாம்.
கருவேப்பிலை மற்றும் தயிர்:
- ஒரு கைப்பிடி கருவேப்பிலையை நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் முடியில் அப்ளை செய்து 1/2 மணிநேரம் வரை ஊறவைத்து பிறகு தலையை அலசி விடுங்கள்.
- தயிர் சேர்ப்பதால் இது குளிர்ச்சி தன்மையுடையது. எனவே குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாதவர்கள் இம்முறையை தவிர்த்து கொள்ளுங்கள்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |