How to Grow Hair Thicker and Longer Naturally in Tamil
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவரவர் அழகினை பராமரித்து கொள்ள வேண்டும் என்ற அசையும் ஆர்வமும் ஆசையும் இருக்கும். அதிலும் குறிப்பாக தங்களின் தலைமுடியை நன்கு பராமரித்து அடர்த்தியாக வளரவைக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஆனால் அவ்வாறு தமது அழகினையும் தலைமுடியையும் பராமரித்து கொள்வதற்கான வழிமுறைகள் தான் தெரியாது. அதேபோல் இன்றைய அவசர உலகில் இவற்றை எல்லாம் செய்வதற்கு நம்மிடம் நேரமும் இருக்காது. எனவே தான் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Grow Hair Faster and Thicker Naturally in Tamil:
பொதுவாக நமது தலைமுடி அடர்த்தியாக வளராமல் இருப்பதற்கு பலவகையான காரணங்கள் இருக்கின்றது. அதாவது ஒருசிலருக்கு தலைமுடி அதிக அளவு உதிர்வதாலும், மேலும் ஒருசிலரின் தலைமுடிக்கு சரியான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதாலும் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளராது.
எனவே இயற்கையான சில வழிமுறைகளை பின்பற்றி உங்களின் தலைமுடியின் இந்த பிரச்சனைகளை போக்கி உங்களின் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அவை என்ன வழிமுறைகள் என்பதை இங்கு விரிவாக காணலாம் வாங்க.
முட்டை:
முட்டையில் புரதம் அதிக அளவு உள்ளது. அதனால் நமது தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர்வதற்கு உதவும். அதாவது 1 அல்லது 2 முட்டையை எடுத்து அதனை உடைத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து உங்களின் தலையில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து நன்கு வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்திற்கு இருமுறையோ அல்லது ஒருமுறையோ தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பித்துவிடும்.
தினமும் மசாஜ் செய்தல்:
முடிஉதிர்வை போக்கிவிட்டாலே முடியின் வளர்ச்சியை அதிகரித்துவிடலாம். அதற்கு முதலில் நாம் நமது தலைமுடி உதிர்வை குறைக்க வேண்டும். அதற்காக தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இல்லையெனில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை எடுத்து விரல்களால் தலையில் தடவி தலை முடியின் வேர்க்கால்களில் லேசாக மசாஜ் செய்து அழுத்தமும் கொடுக்கவும்.
இதனால் தலையில் இரத்த ஓட்டம் சீராகும். தலை முடியின் வேர்க்கால்களில் தொற்றுகள் ஏற்படாது. மேலும் தலைமுடி பலமாகும் இதனால் தலைமுடி உதிர்வதை குறைத்து தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.
கற்றாழை:
கற்றாழை நமது உடலின் ஆரோக்கியத்தையும் நமது அழகினை பராமரிக்கவும் மிகுந்த பங்குவகிக்கின்றது. அதனால் கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை உங்களின் தலையில் தடவி 20 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு தலைக்கு குளியுங்கள். இதனையும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொடர்ந்து செய்து வருவதன் மூலமும் உங்களின் தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற இந்த டிப்ஸ் மட்டும் போதும்
அவகேடோ:
அவகேடோவில் வைட்டமின் ஈ உள்ளது. மேலும் இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகவும் உள்ளது. அதனால் இதனை ஒரு பசைபோல் தயாரித்து அதனை உங்களின் தலைமுடியை வேர்க்கால்களில் படுமாறு தடவி 20 நிமிடங்கள் நன்கு உலரவிடுங்கள்.
பின்னர் 10 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு லேசான ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள். இதனால் உங்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளரும்.
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெயிலும் வைட்டமின் ஈ மற்றும் அதிக அளவு கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளது. இதுவும் உங்களின் தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரியும்.
அதாவது 1 அல்லது 2 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை எடுத்து உங்களின் தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள் இதனாலும் உங்கள் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.
கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா அப்போ இந்த 5 வழிமுறைகளை மட்டும் பயன்படுத்துங்க போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |