Natural Way To Grow Hair Faster in Tamil
பெரும்பாலான பெண்கள் அதிகமாக ஆசைப்படுவது தலைமுடி இடுப்பிற்கு கீழ் வளர வேண்டும் என்றுதான். ஆனால் முடியோ அதற்கு மாறாக கழுத்தை விட்டு தாண்டாது.. இதனால், பெருமபாலானோர் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இது சில நாட்களுக்கு நீங்கள் நினைத்த அளவிற்கு முடியை வளர செய்தாலும் அதனை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதும் முடியின் வளர்ச்சி குறைவதோடு மட்டுமில்லாமல் அதிக முடி உதிரவும் தொடங்கும். எனவே நமக்கு எல்லா விதத்திலும் நன்மை அளிக்கக்கூடியது எந்த வித கெமிக்கலும் கலக்காத இயற்கை பொருட்கள் தான். எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்கள் முடியை எப்படி வேகமாகவும் நீளமாகவும் வளர வைப்பது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்..?
உங்கள் முடியை நீளமாக வளர வைக்க நீங்கள் 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம். ஆமாங்க..வீட்டில் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் ஒரு பொருள் போதும்..
அது என்ன பொருள் என்றுதானே கேட்கிறீர்கள்.. அது வேறொன்றுமில்லை வெங்காய தோல் தான்ங்க.. இந்த வெங்காய தோலை எப்படி பயன்படுத்தினால் முடியை வேகமாகவும் நீளமாகவும் வளர வைக்கலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப் -1
முதலில் வெங்காய தோலினை எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இந்த தண்ணீர் மிதமான சூடும் வரும் நிலையில் வெங்காய தோலினை அதில் போட்டு விடுங்கள்.
ஸ்டேப் -3
பிறகு, இதனை நன்கு கொதிக்க விடுங்கள். எந்த அளவிற்கு என்றால் வெங்காய தோலின் நிறம் தண்ணீரில் சார்ந்து சிகப்பு நிறம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் -4
நன்றாக கொதித்ததும், இத்தண்ணீரை வடிகட்டி ஓரி பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். பிறகு, இதனை நன்றாக உலரவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
அப்ளை செய்யும் முறை:
முதலில் உங்கள் முடியினை சிக்கு இல்லாமல் சீவி எண்ணெய் வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, தயாரித்து வைத்த ஸ்ப்ரேயை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். அதாவது, முடியை ஒவ்வொரு பகுதியாக விலக்கி வேர்களில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இந்நிலையில் 5 அல்லது 10 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு, 15 நிமிடம் வைத்துவிட்டு உங்கள் முடியினை அலசி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நீங்களே நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு முடி சூப்பராக வளரும். அதோடு நிறுத்தி விடாமல் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கருவேப்பிலையின் 5 இலைகளையாவது தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.
டக்குனு உங்க நரைமுடி எல்லாம் கருப்பாக மாற வெந்தயம் மட்டும் போதும்..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |