How To Grow Your Hair Faster Naturally
பெண்கள் அனைவருமே அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு தான் முடி நீளமாக இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு முடி வளர்ச்சி என்பதே இருக்காது. இதனால் மற்றவர்களின் முடியை பார்த்து ஆச்சரியப்படுவோம். இதுமாதிரியான முடி எனக்கு எப்போது வளரும் என்று நினைப்போம். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் எந்த ஹேர்பேக்கும் பயன்படுத்தாமலே எளிதாகவே உங்கள் முடியை நீளமாக வளர்க்கலாம். ஓகே வாருங்கள் உங்கள் முடியின் வளர்ச்சியை எப்படி அதிரிப்பது என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Grow Long Hair Fast in 1 Month in Tamil:
செம்பருத்தி எண்ணெய்:
செம்பருத்தி பூவில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே இதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
முதலில் செம்பருத்தி பூக்களை பறித்து அதனை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் லேசாக சூடானதும் அதில் காயவைத்து எடுத்து வைத்துள்ள செம்பருத்தி பூவை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் அதனை இறக்கி நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை நிங்கள் தலையில் அப்ளை செய்து 20 அல்லது 30 நிமிடங்கள் வரை ஊறவையுங்கள்.
அதன் பிறகு, ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள்.
இந்த எண்ணெய்யை நீங்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் லேசாக சூடு படுத்தி ஆறவைத்து தலையில் அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முடியின் நீளத்தை அதிகப்படுத்தலாம்.
முகத்தில் உள்ள எல்லா பருக்களும் ஒரே இரவில் முழுசா போகணுமா.. அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க..!
கருவேப்பிலை எண்ணெய்:
முதலில் கருவேப்பிலையை தண்ணீர் இல்லாமல் வெயிலில் உலர வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் உலர வைத்துள்ள கருவேப்பிலையை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
கொதித்ததும், அதனை இறக்கி சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணெய்யை நீங்கள் ஒவ்வொரு முறை தலை குளிக்கும்போதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் வைத்து அதன் பிறகு குளிக்க வேண்டும்.
எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |