உங்க நகம் நீளமாகவும் அழகாகவும் வளர வேண்டுமா.? அப்போ இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க..!

Advertisement

How To Grow Nails Longer Naturally in Tamil

பொதுவாக நம்மில் பலபேருக்கு நகம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். நகத்தை நீளமாக வளர்த்து அதில் பலவிதமான வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டு நகத்தை அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் ஒரு சிலருக்கு நகத்தை நீளமாக வளர்க்க ஆசை இருந்தாலும் அவர்களுக்கு நகம் வளராமலே இருக்கும். அப்படியே வளர்ந்தாலும் இடையில் ஒரு சில காரணத்தால் உடைந்து விடும். இதற்கு காரணம் நகத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதே ஆகும். எனவே இப்பதிவின் வாயிலாக நகத்தை சரியான முறையில் பராமரித்து நீளமாகவும், அழகாகவும் வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How to Grow Long and Strong Nails Fast at Home in Tamil:

 nagam neelamaga valara in tamil

தேங்காய் எண்ணெய்:

முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் சில துளிகள் தேன் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இதனை மிதமான சூட்டில் சூடு செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த எண்ணெயை பயன்படுத்தி நகங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.

இவ்வாறு நீங்கள் தினமும் செய்தால் உங்கள் விரல் நகம் வேகமாக வளரும்.

கை மற்றும் கால்களில் நகம் சொத்தை குணமாகுவதற்கு இயற்கையான எளிய சில வழிகள்..

ஆரஞ்சு சாறு:

 how to grow long and strong nails fast at home in tamil

ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாற்றினை எடுத்து கொள்ளுங்கள். இதில் விரல் நகங்களை நனைத்து 10 நிமிடம் அப்படியே வைத்து பிறகு கழுவி விடுங்கள்.

ஆரஞ்சு சாற்றில் ஃபாலிக் ஆஸிட் உள்ளது. இது நகம் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எனவே இம்முறையை நீங்கள் தினமும் ஒருமுறை செய்து வந்தால் நகம் வேகமாக வளரும்.

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு: 

 how to grow long and strong nails fast in tamil

ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இக்கலவையில் விரல்களை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு எடுத்து விடுங்கள்.

இம்முறையை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்து வரலாம்.

உங்கள் கண் இமையில் முடி சின்னதாக இருக்கா.. அப்போ உங்கள் கண்முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..

முட்டை ஓடு மற்றும் ஆளி விதை:

 how to grow long nails faster in tamil

முதலில் உங்களுக்கு தேவையான அளவில் முட்டை ஓடு, ஆளி விதை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்பொடியினை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது, தயார் செய்து வைத்துள்ள பொடியில் சிறிதளவினை எடுத்து வெதுவெதுப்பான பாலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்கள் விரல் நகங்களில் அப்ளை செய்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு கழுவி விடுங்கள்.

இம்முறையினை நீங்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் விரல் நகம் நீளமாகவும் வலிமையாகவும் வளரும்.

மேற்கூறியுள்ள குறிப்புகளில் உங்களுக்கு விருப்பமான 1 குறிப்பை நீங்கள் பின்பற்றி பயனடையலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement