இந்த முடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமானு உங்கள கேட்க வைக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!

Advertisement

கறிவேப்பிலை ஹேர் பேக்

முடி வளர்ச்சி என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் ஒரு சவாலான ஒன்றாக தான் இருக்கிறது. ஏனென்றால் முடி வளர்ச்சிக்காக யாரும் எதையும் ட்ரை செய்யாமல் இருக்க மாட்டார்கள். தினமும் ஏதோ ஒன்றோ அல்லது வாரம் 1 முறையோ ஹேர் பேக் அப்ளை செய்து கொண்டே தான் இருப்பார்கள். இவ்வாறு நாம் ட்ரை செய்யும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன் கிடைக்கும், ஒரு சிலருக்கு பலன் கிடைக்காமலும் போகும் வாய்ப்புகள் என்பது அதிகமாக இருக்கிறது. அப்படி உங்களுக்கு முடி வளருவதற்கு ட்ரை செய்த ஹேர் பேக் பலன் அளிக்கவில்லை என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய Life Style பதிவில் முடி நீளமாக வளர கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலையினை எவ்வாறு பயன்படுத்துவது என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வேகமாக முடி வளர என்ன செய்வது:

கறிவேப்பிலையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், புரதம், சுண்ணாம்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் மற்றும் இரும்புசத்து என பல சத்துக்கள் இருக்கிறது. அதனால் கறிவேப்பிலையுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுதினால் முடி வேகமாக வளரும்.

அதனால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  • செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
  • முட்டை- 2
  • கான் பிளவர் மாவு- 2 ஸ்பூன்

மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க 

Karuveppilai Hair Pack in Tamil:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலையினை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.

 வேகமாக முடி வளர என்ன செய்வது

அதன் பிறகு அரைத்த பேஸ்ட்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நன்றாக சாறு போல பிழிந்து பவுலில் வைத்து விடுங்கள். பின்பு இதனுடன் 2 ஸ்பூன் கான் பிளவர் மாவினையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து குறைவான தீயில் வைத்து அதில் ஒரு கடாயில் கலந்து வைத்துள்ள பேக்கினை 2 நிமிடம் வரை நன்றாக கலந்து கொண்டு பின்பு அதனை நன்றாக ஆற வைத்து விடுங்கள்.

 கறிவேப்பிலை ஹேர் பேக்

கடைசியாக 2 முட்டையின் வெள்ளை கருவினை அதில் மீண்டும் ஒரு 5 நிமிடம் வரை கலந்து விடுங்கள். அவ்வளவு தாங்க ஹேர் பேக் தயார். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலையில் நன்றாக முடியின் வேர் கால்களில் படும் வரை அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.

இந்த முறையினை வாரம் 1 முறை அப்ளை செய்வதன் மூலம் முடி உதிர்வு இல்லாமல் முடியினை வேகமாக வளர ஆரம்பிக்கும்.

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement