Mudi Adarthiyaga Valara Enna Seivathu
முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று நினைத்து பெண்கள் பெரும்பாலும் அதிகமாக செலவு செய்வார்கள். ஏனென்றால் பெண்களுக்கு முடி தான் அழகு என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி பார்த்தால் என்ன தான் செலவு செய்து முடியை அடர்த்தியாக வளர வைக்கலாம் என்று நினைத்தாலும் கூட அது எளிதில் யாருக்கும் நடப்பது இல்லை. ஆகவே இன்று முடியை அடர்த்தியாக எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வளர செய்வது என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நெல்லிக்காய் முடி வளர்ச்சி:
- காய்ந்த நெல்லிக்காய்- 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ-5
- வெள்ளை உளுந்து- 2 கைப்பிடி அளவு
இப்போது ஒரு பவுலில் மிதமான சூடு உள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் உளுந்து, நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி பூவை அதில் சேர்த்து வேண்டும்.
பின்பு பவுலில் ஊறவைத்துள்ள பொருளை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள பொருளை சேர்த்து அதில் இருக்கும் தண்ணீரையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
அடுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்டை ஒரு துணியில் சேர்த்து நன்றாக சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
உங்களது Skin எப்போதும் பளிச்சென்று இருக்க ஒரு பீஸ் பப்பாளி போதும்
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள சாற்றை நன்றாக தலையில் அப்ளை செய்து விடுங்கள். பின்பு ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து ஷாம்பு சேர்த்து தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்தால் போதும் உங்களது முடி விரைவில் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |