தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி எண்ணெய் தயார் செய்யும் முறை..!

Advertisement

கரிசலாங்கண்ணி எண்ணெய் தயார் செய்யும் முறை – How to Make Bhringraj Hair Oil in Tamil

கூந்தல் வளர்ச்சிக்கு பெரும்பாலான மூலிகை செடிகள் நமக்கு உதவுகிறது. அவற்றில் ஓன்று தான் கரிசலாங்கண்ணி இலை பயன்படுகிறது. குறிப்பாக இயற்கை தந்த இந்த கரிசலாங்கண்ணி இலை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது, மேலும் தலை முடியை அடர்த்தியாக மற்றும் நீளமாக, நன்கு கருமையாக வளர் செய்கிறது. ஆக உங்கள் முடி நன்கு போஷாக்குடன் வளர வேண்டும் என்றால். இந்த கரிசலாங்கண்ணி இலையை உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். சரி இப்பொழுது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கரிசலாங்கண்ணி எண்ணெய் தயார் செய்யும் முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரிசலாங்கண்ணி எண்ணெய் தயார் செய்யும் முறை – kerala hair oil preparation in tamilkerala hair oil preparation in tamil

தேவையான பொருட்கள்:

  1. ஒரு கையளவு – கரிசலாங்கண்ணி
  2. ஒரு லிட்டர் – தேங்காய் எண்ணெய்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 30 நாளில் முடி வளர மூன்று வகையான கூந்தல் எண்ணெய்கள்!

தயார் செய்யும் முறை:

ஒரு கையளவு கரிசலாங்கண்ணி இலையை பறித்துக்கொள்ளுங்கள், அதனை நன்கு சுத்தமாக அலசி ஒரு காட்டன் துணியை விரித்து அவற்றில் அலசிய கரிசலாங்கண்ணி இலையை பரவலாக போட்டு அவற்றில் இருக்கும் ஈரம் முழுமையாக காயும் வரை உலர்த்தவும்.

கரிசலாங்கண்ணியில் உள்ள ஈரப்பதம் முழுமையாக காய்ந்ததும் அதனை ஒரு பிளேட்டில் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு சூடுபடுத்தவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் கரிசலாங்கண்ணி இலையை அவற்றில் சேர்த்து அடுப்பு தீயினை மிதமான தீயில் வைக்கவும்.

கரிசலாங்கண்ணியில் உள்ள சாறு முழுவதும் எண்ணெயில் சேரும் வரை நன்றாக எண்ணெய் காய்ச்ச வேண்டும். அதாவது எண்ணெயின் நிறம் அடர்ந்த பச்சை நிறமாக மாறும் வரை நன்றாக எண்ணெயை காய்ச்சவும்.

அதன்பிறகு அடுப்பை அணைத்து காய்ச்சிய எண்ணெய்யை நன்றாக ஆறவைக்கவும்.

எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூந்தல் மற்றும் சரும அழகை பாதுகாக்கும் ஒரே எண்ணெய் உங்களுக்கு தெரியுமா..!

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெய்யை அனைவரும் கூந்தல் எண்ணெய்யாக தலை முடிக்கு பயன்படுத்தலாம், தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும், குறிப்பாக அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியை நீங்கள் கூடிய விரைவிலேயே பெற முடியும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement