கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பது எப்படி? – How to Make Bhringraj Oil for Hair Growth at Home in Tamil
மூலிகையின் ராஜாவாக கரிசலாங்கண்ணி விளங்குகிறது. ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகை எண்ணெய் பல நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கரிசலாங்கண்ணி எண்ணெய் பயன்களில் மிக முக்கியமானது தலைமுடி பராமரிப்பு தான். முடி உதிர்தல், பொடுகு மற்றும் இளநரை போன்ற அனைத்து முடி பராமரிப்பு பிரச்சனைகளுக்கு கரிசலாங்கண்ணி எண்ணெய் சிறந்த தீர்வினை தருகிறது. ஆக கரிசலாங்கண்ணி எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடலாம். சரி வாங்க இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?, தேவைப்படும் பொருட்கள் என்னென்ன, எப்படி தலைக்கு பயன்படுத்த வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கரிசிலாங்கண்ணி – ஒரு கைப்பிடியளவு
- சோற்றுக்கற்றாழை – 1/2 மடல்
- தேங்காய் எண்ணெய் – 500 மில்லி
- இடித்த வெந்தயம் – 1 ஸ்பூன்
- காய்ந்த கருவேப்பிலை – சிறிதளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்து தேய்த்தால் போதும்..
வெள்ளை கரிசலாங்கண்ணி எண்ணெய் செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை பறித்து சுத்தமாக கழுவிய பிறகு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஓரளவு அரைத்துக்கொள்ளுங்கள்.
அதேபோல் அரை மடல் கற்றாழையை கட் செய்து ஒரு 1/2 மணி நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும் பின் அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவிவிட்டு அவற்றில் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு ஸ்பூன் வெந்தியதை சிறிய உரலில் போட்டு இடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 500 மில்லி தேங்காய் எண்ணெய்யை செய்து சூடுபடுத்தவும்.
எண்ணெயானது சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10 நிமிடம் கழித்து காய்ந்த கருவேப்பிலை, இடித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் சோற்று கற்றாழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மீண்டும் 15 முதல் 20 நிமிடம் நன்றாக எண்ணெய்யை காய்ச்ச வேண்டும்.
20 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊறவைக்கவும். பிறகு மறுநாள் காலை அந்த எண்ணெய்யை வடிகட்டி கொள்ளவும். பின் இந்த காய்ச்சிய எண்ணெயுடன் 500 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வரலாம்.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் உங்கள் தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து வர தலைமுடி கருமையாக மற்றும் அடர்த்தியாக வளரும். உங்களுக்கு இளநரை பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனையும் சரியாகிவிடு. மேலும் உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனையை தடுத்து உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த தண்ணீர் போதும்..!
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Life style |