நீளமான முடி வேண்டுமா..? அப்போ இதை மட்டும் முடியில் அப்ளை செய்யுங்கள்..!

Advertisement

Home Remedy to Make Hair Grow Faster and Thicker

மனிதர்களாக பிறந்த அனைவருமே, தினமும் ஒரு பிரச்சனையை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி பிரச்சனை. அதாவது, ஒரு சிலருக்கு தலைமுடி நரைத்து இருக்கும், ஒரு சிலர்க்கு முடி வளராமலே இருக்கும்.. இன்னும் ஒரு சிலருக்கு முடி கொட்டுதல், பொடுகு தொல்லை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக பலரும் பல விதமான முறைகளை கையாண்டு வருவார்கள். எனவே, முடியை பராமரிக்க கூடிய வழிகளில் ஒன்றான ஒரு வழியை இபபதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முடியை வளர வைக்கக்கூடிய வழிகளில் இயற்கையாக வழிதான் சிறந்தது. முடிக்கு மட்டுமல்ல எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதனை இயற்கையான முறையில் கையாளுவதன் மூலமாக மட்டுமே எந்தவொரு பக்கவிளைவுகளும் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். எனவே, அந்த வகையில் உங்கள் முடியை இயற்கையான பொருட்களில் இரண்டு பொருட்களை வைத்து தலைமுடியை எப்படி நீளமாகவும் கருப்பாகவும் வளர வைப்பது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Hair Grow Faster And Black in Tamil:

தேவையான பொருட்கள்:

  • வெந்தயம் – 1 ஸ்பூன் 
  • கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

முதலில், வெந்தயத்தை 8 மணிநிறம் வரை ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து, ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில், கருஞ்சீரகத்தை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

 homemade remedy to make hair grow faster in tamil

அதன் பிறகு, வெந்தய பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் பொடியாக அரைத்து வைத்த கருஞ்சீரக பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதாங்க.. முடியை நீளமாக வளர்க்க ஹேர் பேக் தயார்..

போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா.

பயன்டுத்தும் முறை:

தலைகுளிப்பதற்கு முன்பாக இந்த பேஸ்டை தலையில் அப்ளை செய்து அதன் பிறகு, தலை குளிக்க வேண்டும்.

அதாவது, முதலில் தலையில் எண்ணெய் வைத்து ஊறவைத்து சிக்கு எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

முடி கருப்பாக அடர்த்தியாக வளர

அப்ளை செய்து 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து அதன் பிறகு, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலையை அலசி விடுங்கள்.

இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம், உங்கள் முடி கருமையாகவும் நீளமாகவும் வளர தொடங்கும்.

முகத்தில் உள்ள எல்லா பருக்களும் ஒரே இரவில் முழுசா போகணுமா.. அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement