How to Make Homemade Hair oil For Black Hair
நம் முன்னோர்களின் காலத்தில் வயதான பிறகு கூட முடியை உதிராமலும், நரைமுடி வராமலும் வைத்திருந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் நம் முன்னோர்கள் சரியான நேரத்தில் உணவை உட்கொண்டனர், ஆரோக்கியமான உணவையும் சாப்பிட்டார்கள். இன்றைய கால கட்டத்தில் உள்ளவர்கள் பணத்தை சம்பாதிப்பத்ற்கு ஓடி ஓடி உழைக்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை இதனால் நரை முடி சீக்கிரமாகவே வருகிறது. மேலும் மன அழுத்தம், தண்ணீர் சரியாக குடிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
நரை முடியை சரி செய்வதற்கு ஆயில்:
ஆயில் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – 1 கப்
- வெந்தயம் – 2 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி
- நெல்லிக்காய் – 1/4 கப்
- தேங்காய் எண்ணெய்- 100 மில்லி லிட்டர்
எண்ணெய் செய்முறை:
மிக்சி ஜாரை எடுத்து கொண்டு அதில் கருவேப்பிலை, கற்றாழை ஜெல், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் வெந்தயம் மற்றும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து 25 நிமிடம் கொதிக்க விடவும்.
நீங்களே எதிர்பார்க்காத முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க..
கொதிக்கின்ற கலவையானது கொதித்து கருவேப்பிலையில் உள்ள சாயம் இறங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
மறுநாள் காலையில் செய்து வைத்துள்ள சாயத்தை ஒரு துணியில் வைத்து வடிக்கட்டி சாயத்தை மட்டும் எடுத்து கொள்ளவும்.
பயன்படுத்துவது எப்படி.?
செய்து வைத்துள்ள எண்ணெயை தலையில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் தலை தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த எண்ணெயை பயன்படுத்தி வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் நரை முடி வராமலும் தடுக்க முடியும். நரை முடி இருந்தாலும் அதனை சரி செய்ய முடியும்.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |