Mudi Neelamaga Valarvathu Eppadi
தலைமுடி என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட சிலருக்கு நீளமாகவும், மற்ற சிலருக்கு நீளம் குறைவாகவும் காணப்படுகிறது. இத்தகைய பிரச்சனை ஆனது நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதில் சிலர் எனக்கு தலைமுடியின் வேர்க்கால்கள் பலமாக இல்லை அதனால் தான் முடி அதிகமாக கொட்டுகிறது என்று கூறுவார்கள். அதன் பிறகு இந்த பிரச்சனையினை எப்படியவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கும் ஷாம்பு, ஹேர் பேக் மற்றும் ஹேர் மாஸ்க் என பலவற்றை உபயோகப்படுத்துவார்கள். இவ்வாறு நாம் கடையில் விற்கும் பொருளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் காசு தான் செலவுமே தவிர தலை முடியில் எந்த விதமான முன்னேற்றமும் காணப்படுவது இல்லை. ஆகையால் இன்று வீட்டிலேயே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து அதனை வைத்து முடியின் வளர்ச்சியினை எவ்வாறு அதிகரிப்பது என்று தான் பார்க்கப்போகிறோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி வேகமாக வளர என்ன செய்யலாம்:
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஷாம்பு தயாரிப்பது எப்படி முடி வளர்ச்சியினை அதிகரிக்க செய்வது என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆமணக்கு எண்ணெய்- 1/2 கப்
- நெல்லிக்காய் பவுடர்- 1 ஸ்பூன்
- வெந்தயம் பவுடர்- 1 ஸ்பூன்
முதலில் ஷாம்பு தயாரிப்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்துவைத்து கொள்ளுங்கள்.
Life Style👇👇 1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க
தலைமுடி நன்றாக வளர:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைய்யுங்கள். இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி அதன் மேலே கொஞ்சம் குழியாக உள்ள பெரிய அளவிலான பவுலை வைத்து அதில் 1/2 கப் ஆமணக்கு எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.

அடுத்து எண்ணெய் சிறிது நேரம் காய்ந்த பிறகு எடுத்துவைத்துள்ள நெல்லிக்காய் பவுடர் மற்றும் வெந்தயம் பவுடர் இரண்டையும் சேர்த்து 20 நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.
இப்போது 20 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அடுப்பில் இருக்கும் ஷாம்பினை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடுங்கள்.

கடைசியாக ஷாம்பு சிறிது நேரம் ஆறிய பிறகு ஒரு பாத்திரத்தில் காட்டன் துணி வைத்து அதில் ஆற வைத்துள்ள ஷாம்பினை ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள்.
Life Style👇👇எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..
எப்படி பயன்படுத்துவது..?
தயார் நிலையில் உள்ள ஷாம்புவை கண்களில் படாதவாறு தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இதனை மட்டும் செய்து பாருங்கள் முடியின் வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்க கூடும்.
பயன்கள்:
ஆமணக்கு எண்ணெயில் வைட்டமின் E மற்றும் புரதங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் இந்த எண்ணையுடன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் வெந்தயம் பவுடர் சேர்ப்பதன் மூலம் முடி ஆனது நன்றாக கருமையாக வேகமாக வளரும்.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |













