Lip Pink Tips
உதட்டின் நிறம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கருப்பாகவும், சிவப்பாகவும் இருக்கும். ஆனால் எல்லாரும் உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதற்காக பலரும் கடைகளில் விற்கும் லிப் பாம் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது உதட்டின் நிறம் மாறும், ஆனால் இதனை பயன்படுத்தாத போது உதட்டின் நிறம் கருப்பாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் நிரந்தரமாக உதட்டை சிவப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உதட்டின் நிறம் சிவப்பாக மாற:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சர்க்கரை:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய், சிறிதளவு தேன், 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உதட்டில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும். பாதாம் எண்ணெய் மற்றும் தேன் உதடுகளுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும், சர்க்கரை இறந்த சருமத்தை நீக்குகிறது. இந்த ஸ்க்ரப்பை தொடர்ந்து பயன்படுத்தினால், உதடுகளுக்கு நிரந்தரமாக உதடு சிவப்பு நிறமாக மாறும்.
பீட்ரூட்:
பாதி அளவை விட சிறிய அளவிலான பீட்ரூட்டை எடுத்து அரைத்து கொள்ளவும். அரைத்த பீட்ரூட்டை வடிக்கட்டியை வைத்து வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை உதட்டில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும்.
வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்.. அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும் |
கற்றாழை மற்றும் தேன்:
ஒரு பவுலில் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி, தேன் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை உதட்டில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும். கற்றாழை மற்றும் தேன் இரண்டும் உதடுகளை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் மென்மையாகவும், சிவப்பு நிறமாகவும் மாறும்.
உதடுகளை சிவப்பாக வைத்து கொள்ள வேண்டுமென்றால் தவிர்க்க வேண்டியவை:
கெமிக்கல் நிறைந்த பொருட்களை உதடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தூங்குவதற்கு முன்பு லிப்ஸ்டிக்கை ரிமூவ் செய்ய வேண்டும்.
புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புகை பிடிப்பதால் தோல்கள் வறட்சி அடைந்து கருப்பாக மாறிவிடும்.
இவ்ளோ முடியா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.. அதற்கு இந்த 2 பொருளை எண்ணெயில் சேர்த்து தடவுங்க |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |