முகம் தங்கம் போல் ஜொலிக்க
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் மற்றவர்களை விட தாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் பார்லர் சென்று தன்னை அழகுபடுத்தி கொள்கிறார்கள். இன்னும் சில நபர்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இப்படி பயன்படுத்துவதால் சில நேரத்திற்கு மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து முகம் கலையிழந்து காணப்படும். அதனால் இந்த பதவில்இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்:
முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி முல்தானி மெட்டி, 2 தேக்கரண்டி தக்காளி சாறு, 1/2 தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.
கற்றாழை பேஸ் பேக்:
கற்றாழையை தோல் சீவி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி கொள்ளவும். கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை நீக்குவதற்கும் உதவுகிறது. முகம் பளபளப்பாக இருக்க தினமும் பயன்படுத்த வேண்டும்.
முக்கியமாக உங்களுக்கு நுரையீரல் பிரச்சனை, சுவாச பிரச்சனை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தால் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனால் உங்களின் பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்தும்.
இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க |
முகம் பளபளப்பாக இருக்க செய்ய வேண்டியவை:
முகம் பளபளப்பாக இருப்பதற்கு தினமும் 15 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமானது. நீரானது உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றுகிறது.
இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் கலந்த பாலை குடிக்க வேண்டும். ஏனென்றால் மஞ்சளில் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது. இவை முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |