உங்க உதடுகள் கோவைப்பழம் போல் சிவப்பாக மாற பாதாம் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Advertisement

How to make Your Lips Pink Naturally Permanently in Tamil

பொதுவாக நமது முகத்திற்கு மிகவும் அழகினை சேர்ப்பது நமது உதடுகள் தான். அப்படி நமது முகத்திற்கு அழகு சேர்கின்ற உதடுகள் ஒரு சிலருக்கு கருமையாகவும் வறண்டும் காட்சி அளிக்கும். அதனால் அதனை சரி செய்வதற்கு அவர்கள் பல வகையான கெமிக்கல் கலக்கப்பட்ட லிப் பாம் மற்றும் லிப்ஸ்டிக் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள்.

ஆனால் அவையாவும் நமக்கு நன்மைகளை அளிப்பதை விட தீமைகளையே அதிக அளவு ஏற்படுத்தும். அதனால் தான் இயற்கையான முறையில் உங்களின் உதடுகளை சிவப்பாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Natural Tips for Rosy Lips in Tamil:

Natural Tips for Rosy Lips in Tamil

இயற்கையான முறையில் உங்களின் உதடுகளை சிவப்பாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்க்கலாம்.

  1. தேன் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. பாதாம் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் 
  3. எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன் 
  4. பீட்ரூட் சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  5. புதினா சாறு – 1 டேபிள் ஸ்பூன் 

Lip Stick பயன்படுத்தாமல் உங்களின் உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளுங்கள்.

கருமையாக உள்ள உதடுகள் இரண்டு வாரத்தில் சிவப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

பீட்ரூட் சாற்றினை கலந்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாற்றினை கலந்து கொள்ளுங்கள்.

புதினா சாற்றினை கலக்கவும்:

இறுதியாக அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் புதினா சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்களின் உதடுகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் உங்கள் உதடுகளை கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் உதடுகள் நன்கு கோவைப்பழம் போல் சிவப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

30 நாட்களில் உங்க தலை முடி தாறுமாறா வளர ஆலிவ் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க போதும்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement