வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி வால் மாதிரி இருக்கும் முடியை வளர வைக்க செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க..!

Updated On: June 9, 2023 6:34 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Hair Growth and Thickness Home Remedies 

அனைவருடைய தலையிலும் முடி பிரச்சனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் வருகிறது. அத்தகைய பிரச்சனைகளில் ஒன்றாக மெலிந்த முடி பிரச்சனையும் இடம் பெற்றிருக்கிறது. அதாவது தலையில் இருக்கும் முடி ஆனது ஒரே மாதிரியாக இல்லாமல் மெலிந்து காணப்படுகிறது. மெலிந்த முடியை மீண்டும் ஒரே மாதிரியாக வளர வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதனால் இன்றைய பதிவில் மெலிந்த முடியை மீண்டும் சமமான அளவிற்கு வளரவைக்கக்கூடிய ஒரு அருமையான செம்பருத்தி ஹேர் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே செம்பருத்தி பூ வைத்து எப்படி ஹேர் பேக் தயார் செய்வது என்றும், அதனை எவ்வாறு அப்ளை செய்வது என்றும் பார்க்கலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

முடி கருமையாக அடர்த்தியாக வளர:

செம்பருத்தி இலை

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் கால்சியம் சத்து ஆனது உடலுக்கு அளிக்கும் நன்மையினை போலவே நம்முடைய தலை முடி பிரச்சனைக்கும் நல்ல தீர்வினை அளிக்கிறது.

அதனால் செம்பருத்தி பூவுடன் தேங்காய் சேர்த்து ஹேர் பேக் தயார் செய்து முடிக்கு அப்ளை செய்வதன் மூலம் வால் மாதிரி உள்ள முடி ஆனது ஒரே மாதிரியாக அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

  • செம்பருத்தி பூ- 1 கைப்பிடி அளவு
  • தேங்காய்- தேவையான அளவு

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்

முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது:

முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது

முதலில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு தேங்காயினை பூவினை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு 1 கைப்பிடி அளவு செம்பருத்தி பூ எடுத்துக்கொண்டு அதனையும் நன்றாக தண்ணீரில் அலசி வைத்து விடுங்கள்.

இப்போது ஒரு மிக்சி ஜாரில் எடுத்து வைத்துள்ள இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து வடிகட்டி வைத்து விடுங்கள்.

அடுத்து வடிகட்டி வைத்துள்ள பேஸ்ட்டினை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூடி அப்படியே இரவு முழுவதும் வைத்து விடுங்கள். அதன் மறுநாள் காலையில் அந்த ஹேர் பேக்கினை பார்த்தால் பாத்திரத்தின் அடியில் தண்ணீரும் அதன் மேலே ஹேர் பேக்கும் இருக்கும்.

ஆகவே ஹேர் பேக்கின் அடியில் இருக்கும் தண்ணீரை வெளியிற்றி விட்டு வெறும் பேஸ்ட்டினை மட்டும் வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க ஹேர் பேக் தயார்.

எப்படி பயன்படுத்துவது:

எப்போதும் தலையில் ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பாக நன்றாக தேங்காய் எண்ணெயினை தடவி கொள்ள வேண்டும். இப்போது தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் உச்சி முதல் அடி வரை செய்து 20 நிமிடம் கழித்து வழக்கமான ஷாம்பு பயன்படுத்தி குளித்து விடுங்கள்.

இந்த ஹேர் பேக்கினை வாரம் 2 முறை பயன்படுத்துவதன் மூலம் வால் மாதிரி உள்ள முடியானது கருப்பாகவும், அடர்த்தியாக வளருவதை நீங்களே பார்க்கலாம்.

மெலிந்த முடியை அடர்த்தியாக வளர வைக்க இந்த ஹேர் பேக் போதும் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!