அரிசி நீர் உங்கள் முகத்தை பொலிவாக மாற்றம்..! 7 நாட்கள் செய்தால் போதும்..!

Advertisement

How to Prepare Rice Water For Skin Whitening in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை நினைப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பொருட்களை முகத்திற்கு  கடையில் வாங்கி பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இப்படி பயன்படுத்தினால் அதில் இருக்கும் கெமிக்கல் முகத்தை இன்னும் ஒரு மாதிரி பொலிவு இல்லாமல் மாற்றும். ஆகவே இயற்கை முறையில் முகத்தை பொலிவாக மாற்றினால் நன்மை அளிக்கும். அதேபோல் உங்கள் முகத்தை எப்படி பொலிவாக மாற்றுவது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Prepare Rice Water For Skin Whitening in Tamil:

டிப்ஸ்: 1

முதலில் 5 ஸ்பூன் அளவிற்கு அரிசி எடுத்து அதனை கழுவிகொள்ளவும். அதன் பின்பு அதில் 1/2 டம்ளர் அளவு குடிக்கும் தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின்பு அந்த நீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

அதன் கூடவே காய்ச்சாத பால் 3 ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அந்த பாலுடன் 1 ஸ்பூன் அளவிற்கு அரிசி நீர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். அதன் பின்பு 5 நிமிடம் அப்படியே விட்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இப்படி செய்தால் முகம் பொலிவாகவும் பருக்கள் வராமலும் இருக்கும்.

2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க 

டிப்ஸ்: 2

Face Brightening Tips in tamil

 

இதில் நாம் Face Mask செய்ய போகிறோம். அதற்கு முதலில் 1 ஸ்பூன் அளவு அரிசி நீர் எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அதன் கூடவே 1 ஸ்பூன் அளவு ரோஸ் வாட்டர் எடுத்து கொள்ளவும். கடைசியாக கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும் இப்போது இது மூன்றையும் கலந்துகொள்ளவும். அதன் பின்பு முகத்தில் அப்ளை செய்யவும். இப்படி செய்வதால் முகம் பொலிவாகவும் வெண்மையாகவும் இருக்கும். 10 நிமிடம் அப்படியே விட்டு அதன் பின்பு கழுவி கொள்ளலாம்.

இயற்கையான முறையில் முக பருக்களை நீக்குவது எப்படி

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement