எண்ணெய் சருமத்திற்கான நேச்சுரல் டோனர்கள்..!

Advertisement

சருமத்தை இளமையாக வைத்திருக்கும் 2 டோனர்கள்.. வீட்டிலேயே செய்யலாம்! 
How To Prepare Toners For Oily Skin At Home

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கிறதா? அதற்கு உங்கள் சருமத்தில் ரசாயனம் கலந்த டோனர்களை பயன்படுத்த தயங்குகிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்காக தான் இந்த பதிவு. இன்றைய லைப்  ஸ்டைலில் பலவகையான சரும பிரச்சனைகள் வருகின்றன. அவற்றில் ஓன்று தான் ஆயில் ஸ்கின். உங்கள் சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆயில் ஸ்கின் மாற உங்கள் விட்டியேலே மிக எளிதாக நேச்சுரல் முறையில் டோனர்களை தயார் செய்யலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான டோனர்களில் ஆல்கஹால் மற்றும் பிற ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது உங்கள் சருமத்திற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்.

ஆக ஆயில் சருமத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கு கூறப்பட்டுள்ள எளியமற்றும் சருமத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத டோனர்களை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி மற்றும் அதனை பயன்படுத்து முறை குறித்த தகவல்களை விவரமாக பதிவு செய்துள்ளோம். வீட்டில் தயார் செய்து பயன்படுத்தப்படும் இந்த டோனர்கள் உங்கள் சருமத்தைப் புதுப்பிக்கும் மற்றும் பளபளப்பான சருமத்தைக் பெற முகத்திற்கு மேக்கப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பே பயன்படுத்தலாம். சரி வாங்க அதனை எப்படி தயார் செய்யலாம் என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

டோனர்:

டோனர் என்பதை நாம் எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்றால், நமது ஸ்கினை மிருதுவக்குவதற்கு, முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக இந்த டோனரினை பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவார்கள்.

இதனை நாம் லேசாக ஸ்கின்னில் ஸ்ப்ரே செய்து அப்ளை செய்தால் போதும் ஸ்கின் மிகவும் பிரஸ்ஸாக இருக்கும். இதனை நாம் முகம், ஸ்கின் மற்றும் நமக்கு உடலில் எங்கெல்லாம் வியர்வை வருமே அந்த இடங்களில் எல்லாம் டோனர் அப்ளை செய்யலாம். நல்ல பலன்களை தரும். ஸ்கின்னிற்கு நிறைய பலன்களை தரும் டோனரை வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

வெள்ளிரிகையில் செய்ய கூடிய டோனர்:

natural toner

தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 100  மில்லி கிராம்
  2. ரோஸ் வாட்டர் – மூன்று டேபிள் ஸ்பூன்
  3. வெள்ளரிக்காய் – தேவையான அளவு

தயார் செய்யும் முறை:

அடுப்பில் 100 மில்லி கிராம் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பாதி வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை நன்கு மிக்சியில் அல்லது வெஜிடபிள் ஷாப்பர் இரண்டு ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வெள்ளரிக்காயை நைசாக கட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை சுடுதண்ணீரில் சேர்த்து ஒரு மணி  நேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு அதனை வடிகட்டி, 20 மில்லிகிராம் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்தால் அவ்வளவு தான் டோனர் தயார்.

இந்த டோனரை அனைத்து வகையான ஸ்கின் உள்ளவர்களுக்கும் ஏற்ற டோனர் ஆகும்.

இதையயும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு பொருளை உதட்டில் தடவி வந்தால் போதும்.. உதடு சிவப்பழகு பெறும்..!

புதினா டோனர் தயார் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  • புதினா சிறிதளவு
  • சூடான நீர் – 100 மில்லி
  • ரோஸ் வாட்டர் – 20 மில்லி

தயார் செய்யும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். தண்ணீர் நன்கு சூடானதும் அவற்றில் சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்ததும் அதனை வடிகட்டி அந்த புதினா நீறை நன்கு குளிரவிடுங்கள். பிறகு அதனுடன் ரோஸ்  வாட்டர் 20 மில்லி செய்து நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்கினிற்கு பயன்படுத்தலாம். இந்த புதினா டோனர் ஆயில் பேஸ் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும்.

இங்கு கூறப்பட்டுள்ள இரண்டு டோனருமே இயற்கையான முறையில் தயார் செய்தது என்பதனால் சருமத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலு இதனை பயன்படுத்துவதினால் சருமம் நல்ல பளபளப்புடன், புத்துணர்ச்சியுடன் காணப்படும் கண்டிப்பாக ஒரு முறை இப்படி ட்ரை செய்து பாருங்கள்.

இதையயும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மட்டும் போதும்.. நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement